தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  என்னது ரூ.9,000 கோடியா? கிரெடிட் செய்த வங்கி.. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்!

என்னது ரூ.9,000 கோடியா? கிரெடிட் செய்த வங்கி.. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்!

Divya Sekar HT Tamil
Sep 21, 2023 10:57 AM IST

சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்கில் தவறுதலாக 9,000 கோடியை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி செலுத்தியுள்ளது.

கால் டாக்ஸி ஓட்டுநர் அக்கவுண்டில் 9,000 கோடி கிரெடிட் செய்த வங்கி
கால் டாக்ஸி ஓட்டுநர் அக்கவுண்டில் 9,000 கோடி கிரெடிட் செய்த வங்கி

ட்ரெண்டிங் செய்திகள்

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இது ஏதோ ஏமாற்று வேலை என எண்ணியுள்ளார். பின்னர் ரூ. 9,000 கோடி கிரெடிட் ஆனதாக வந்த குறுஞ்செய்தியை நம்பாமல் நண்பருக்கு 25 ஆயிரம் ரூபாய் ஓட்டுனர் ராஜ்குமார் ட்ரான்ஸ்பர் செய்துள்ளார்.

மேலும் தனது வங்கி கணக்கில் ரூ.15 மட்டுமே வைத்திருந்த நிலையில், தன்னை யாரோ ஏமாற்ற முயற்சிப்பதாக எண்ணி நண்பரின் வங்கி கணக்கிற்கு ரூ.25 ஆயிரம் அனுப்பி பார்த்து சோதனை செய்துள்ளார்.

பின்னர் தான் உண்மையில் ரூ.9,000 கோடி டெபாசிட் ஆனதை உறுதி செய்துள்ளார். பின்னர் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டு பேசிய அதிகாரிகள் செலவு செய்த ரூ.25 ஆயிரத்தை திருப்பி கொடுக்க வேண்டாம் எனவும், பதிலாக வாகன கடன் வழங்குவதாகவும் வங்கி தரப்பு சமரசம் செய்ததாக தெரிகிறது.

ராஜ்குமார் வங்கிக் கணக்கில் தவறுதலாக 9,000 கோடியை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி செலுத்தியுள்ளது. பின்னர் தவறுதலாக கிரெடிட் செய்யப்பட்ட பணத்தையும் வங்கி திரும்ப பெற்றது.

வாடகை கார் ஓட்டுநர் வங்கிக்கணக்கில் திடீரென 9000 கோடி ரூபாய் டெபாசிட் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்