தமிழ் செய்திகள்  /  latest news  /  Breaking : நடிகர் விஜய்யுடன் எடுத்த வீடியோவை பகிர்ந்த யோகி பாபு!

முக்கிய நிகழ்வுகளை இதில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

BREAKING : நடிகர் விஜய்யுடன் எடுத்த வீடியோவை பகிர்ந்த யோகி பாபு!

07:59 AM ISTJan 28, 2023 05:50 PM HT Tamil Desk
  • Share on Facebook
07:59 AM IST

வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யுடன் எடுத்த வீடியோவை நடிகர் யோகி பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Sat, 28 Jan 202312:20 PM IST

வீடியோவை பகிர்ந்த யோகி பாபு

வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யுடன் எடுத்த வீடியோவை நடிகர் யோகி பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Sat, 28 Jan 202312:18 PM IST

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் வருவாய் கோட்டாட்சியர் ஒப்படைத்தார்.

Sat, 28 Jan 202311:23 AM IST

வெள்ளத்தில் மிதக்கும் நியூசிலாந்து - 3 பேர் பலி

நியூசிலாந்து நாட்டில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் பெரிய நகராக அறியப்படும் ஆக்லாந்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தற்போதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Sat, 28 Jan 202309:57 AM IST

118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக, ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது

Sat, 28 Jan 202309:55 AM IST

சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை

சர்வதேச ஜி20 மாநாடு காரணமாக, பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Sat, 28 Jan 202308:10 AM IST

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Sat, 28 Jan 202307:58 AM IST

இரண்டு பங்கு உரிமையாளர்கள் ஒப்புதல் இருந்தாலே போதும்!

பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடிப்பதற்கு அதன் உரிமையாளர்களின் மூன்றில் இரண்டு பங்கு உரிமையாளர்கள் ஒப்புதல் இருந்தாலே போதும் என்ற வகையில் தமிழ்நாடு அரசின் குடியிருப்பு உரிமைச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

Sat, 28 Jan 202311:02 AM IST

"தமிழ்நாடு"

மத்திய அரசின் இணையதள பக்கத்தில் தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக "தமிழ்நாயுடு" என தவறாக குறிப்பிட்டதால் சர்ச்சை எழுந்த நிலையில், "தமிழ்நாடு" என திருத்தப்பட்டது.

Sat, 28 Jan 202307:06 AM IST

162 IED குண்டுகள் பறிமுதல்

பீகாரில் மாவோயிஸ்டுகள் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து, 162 IED குண்டுகள், புதைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Sat, 28 Jan 202306:11 AM IST

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் விபத்து

மத்திய பிரதேச மாநிலம்  குவாலியர் விமான தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட சுகோய் 30 , மற்றும் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மொரேனா பகுதியில் ஒன்றுடன் ஒன்று மோதி விழுந்து விபத்துக்குள்ளானது. அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலும் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.  

Sat, 28 Jan 202306:00 AM IST

ஈ.வி.கே.எஸ். வேட்பு மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

Sat, 28 Jan 202306:00 AM IST

டிரைவர் கைது

புதுவண்ணாரப்பேட்டையில் போலி நகைைய அடகு வைத்து 2 கடைகளில் ரூ.2 லட்சம் மோசடி செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Sat, 28 Jan 202305:12 AM IST

புதிய ஒப்புயர்வு மையக் கட்டடத்தை திறந்து வைத்த முதல்வர்

சென்னை, கலைஞர் நகர், ESI மருத்துவமனை அருகே, மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு புனர்வாழ்வு மருத்துமனையின் புதிய ஒப்புயர்வு மையக் கட்டடத்தை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

Sat, 28 Jan 202304:57 AM IST

சென்னை மாநகராட்சி புதிய முன்னெடுப்பு

சென்னை ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு கொசு மருந்து தெளிக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

Sat, 28 Jan 202304:57 AM IST

சரத்குமார் - கவிதா சந்திப்பு

சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமாருடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் எம்எல்சி கவிதா சந்திப்பு.

சரத்குமார் - கவிதா சந்திப்பு
சரத்குமார் - கவிதா சந்திப்பு

Sat, 28 Jan 202304:55 AM IST

அமெரிக்க டாலர் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் செல்லவிருந்த பயணி ஒருவரிடமிருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Sat, 28 Jan 202303:29 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை - தேர்தல் ஆணையம்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Sat, 28 Jan 202302:58 AM IST

லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்து ஒட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து
லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து

Sat, 28 Jan 202302:23 AM IST

பாஜகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு!

பல்லடத்தில் புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தி கடந்த 25ம் தேதி கொசவம்பாளையம் சாலையில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக பாஜகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Sat, 28 Jan 202301:59 AM IST

ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ம் தாள் எப்போது?

ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாளுக்கான கணினி வழித் தேர்வு, பிப்ரவரி 3 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துத்துள்ளது.

Sat, 28 Jan 202301:19 AM IST

பெட்ரோல், டீசல் விலை என்ன தெரியுமா?

இன்று (ஜனவரி.28) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 விற்பனையாகிறது. 252-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

Sat, 28 Jan 202301:18 AM IST

பள்ளிகள் இன்று செயல்படும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக் கிழமைகளில் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்ததை அடுத்து சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று அனைத்து வகை பள்ளிகள் செயல்படும்.

Sat, 28 Jan 202301:14 AM IST

பி.எம்.டபிள்யூ எக்ஸ் ஒன் இன்று அறிமுகம்

பி.எம்.டபிள்யூ எக்ஸ் ஒன் கார் இந்தியாவில் இன்று அறிமுகமாகிறது.

Sat, 28 Jan 202301:13 AM IST

தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

வனத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பறவைகள் கணக்கெட்க்கும் பணி இன்று தொடங்கப்படுகிறது.

Sat, 28 Jan 202301:13 AM IST

ஈரோடு இடைத்தேர்தல் -அதிமுக வேட்பாளர் யார்?

ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் பெயர் இன்று வெளியாக வாய்ப்புள்ளது.