தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tamil Nadu Govt Set To Take Legal Action Against Prakashraj And Bobby Simha For Building Infractions

Actor Prakashraj: பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ் மீது பாயும் நடவடிக்கை! நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!

Kathiravan V HT Tamil
Jan 04, 2024 02:22 PM IST

”கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், இருவர் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்”

நடிகர்கள் பிரகாஷ் ராஜ் - பாபிசிம்ஹா
நடிகர்கள் பிரகாஷ் ராஜ் - பாபிசிம்ஹா

ட்ரெண்டிங் செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அனுமதி இன்றி கட்டடங்களை கட்டிய நடிகர்கள் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.  இதில் நடிகர்கள் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், கொடைக்கானல் வில் பட்டி கிராமத்தில், பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் பங்களாக்களை கட்டி வருகின்றனர், இதற்கு விதிகளை பின்பற்றாமலும், அனுமதி பெறாமல் கட்டட்டங்களை எழுப்பி வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இருந்தார். 

இந்த வழக்கில் அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,  நடிகர்கள் பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ் ஆகியோரின் கட்டடங்களின் கட்டுமானபணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறினர். 

கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், இருவர் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர். 

WhatsApp channel

டாபிக்ஸ்