தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Agri Budget 2024: ‘இயற்கை வேளாண்மைக்கு நிதியே இல்லை!’ பட்ஜெட்டை விளாசும் ஈபிஎஸ்!

TN Agri Budget 2024: ‘இயற்கை வேளாண்மைக்கு நிதியே இல்லை!’ பட்ஜெட்டை விளாசும் ஈபிஎஸ்!

Kathiravan V HT Tamil
Feb 20, 2024 01:48 PM IST

”TN Agri Budget 2024: தேங்காய் எண்ணெயை அரசு கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் விற்கப்படும் என்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை”

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இதுவரை செயல்படுத்தப்படவில்லை. ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு, ஆதார விலையாக 4,000 வழங்கப்படும் என அறிவித்தார்கள், ஆனால் மத்திய அரசின் நிர்ணய விலையோடு, சிறப்பு ஊக்கத்தொகை தரப்படும் என தெரிவித்துள்ளார்கள். விவசாயிகளிடம் கவர்ச்சியான அறிவிப்புகளை தந்து, ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை மறந்த அரசுதான் விடியா திமுக அரசு. 

குறுவை சாகுபடி செய்த டெல்டா விவசாயிகளுக்கு எந்த இழப்பீடும் அறிவிக்கவில்லை, குறுவை சாகுபடி பயிர்க்காப்பீட்டு திட்டத்திலும் சேர்க்கப்படவில்லை. இதனால் டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். 

வேளாண் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையே முறையாக இயக்கவில்லை. 

இயற்கை விவசாயம் குறித்த எந்த திட்டமும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இல்லை, தென்னை விவசாயிகளுக்கும் எந்த முன்னறிவிப்பும் இடம்பெறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் தென்னை விவசாயிகளுக்கு நீரா இறக்க விற்பனை செய்யப்படும் என்றார்கள், ஆனால் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை. தேங்காய் எண்ணெயை அரசு கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் விற்கப்படும் என்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 

காவிரி - குண்டாறு கால்வாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் வரை தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் குறித்து நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மேகதாது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. 

வேளாண் கல்வி சார்ந்த எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை, விவசாயிகளுக்கு கடன் தருவதால் என்ன உள்ளது. அதை விவசாயிகள் திருப்பித்தான் செலுத்த வேண்டும். 

காவிரி கோதாவரி திட்டத்திற்காக பிற மாநில முதலமைச்சர்களை இந்த அரசு நாட வேண்டும். அதிமுக ஆட்சியில் தெலுங்கானா மற்றும் ஆந்திர முதலமைச்சர்களை அதிமுக அமைச்சர்கள் சந்தித்து பேசினார்கள், அவர்களுக்கும் அதற்கு ஒத்துக்கொண்டார்கள் என எடப்பாடி பழனிசாமி பேசினார். 

IPL_Entry_Point