தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Special Schools Under School Education Department-dec. 3 Request To The Movement Chief

பள்ளி கல்வித்துறையின் கீழ் சிறப்பு பள்ளிகள்-டிச. 3 இயக்கம் முதல்வருக்கு கோரிக்கை

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 21, 2023 02:47 PM IST

Tamilnadu: சிறப்பு குழந்தைகளுக்காக நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் நடத்தவும், பராமரிக்கவும் பள்ளி கல்வித் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின்
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

"டிசம்பர் 3 இயக்கமானது கடைநிலை மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமைகளை பெற்று தந்து வருகிறது. சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி மற்றும் அடிப்படை தேவைகளை தெரிந்துக் கொள்வதற்கு பயிற்சியின் மூலம் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இக்குழந்தைகளுக்கு நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் வெறும் சிறப்பு இல்லமாக மாறி பராமரிப்பு மட்டுமே செய்யும் இடமாக மாறி புரையோடி உள்ளது. குழந்தைகளுக்கான நவீன கருவிகளைக் கொண்டு பயிற்சிகள் மற்றும் கல்வி அளிப்பதில் பெரும் பங்கு பெறுவதில்லை. குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும், சுயதேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் தொடர்ந்து கல்வி தேவைப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சிறப்பு குழந்தைகளுக்காக நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் நடத்தவும், பராமரிக்கவும் பள்ளி கல்வித் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் தினந்தோறும் குழந்தைகளுக்கு என்ன மாதிரி வகுப்புகள் எடுக்க வேண்டுமென்று படிப்பதில்லை. அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் வரும்போது, சிறப்பு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு நேரடி பார்வையில் கொண்டு வரப்படும். இதுபோன்ற பயிற்சிகள் சிறப்பு ஆசிரியர்களுக்கு வழங்கும் போது குழந்தைகளின் நிலைகள் முன்னேற்றம் அடையும். எனவே கணம் ஐயா அவர்கள் சிறப்பு பள்ளிகள் அனைத்தும் பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டு வர வழிவகை செய்யுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்