தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Should Ponmudi Be Made The Minister Of Tomorrow Says Supreme Court Warned The Tn Governor Ravi

Ponmudi Case:'பொன்முடியை நாளைக்குள்ள அமைச்சர் ஆக்கலைன்னா’: ஆளுநரை வார்ன்செய்த உச்ச நீதிமன்றம்

Marimuthu M HT Tamil
Mar 21, 2024 04:38 PM IST

Ponmudi Case: பொன்முடிக்கு ஏன் அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்துவைக்கவில்லை என ஆளுநர் ரவியிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொன்முடியை நாளைக்குள்ள அமைச்சர் ஆக்கலைன்னா.. ஆளுநர் ரவியை வார்ன்செய்த உச்ச நீதிமன்றம்!
பொன்முடியை நாளைக்குள்ள அமைச்சர் ஆக்கலைன்னா.. ஆளுநர் ரவியை வார்ன்செய்த உச்ச நீதிமன்றம்!

ட்ரெண்டிங் செய்திகள்

பொன்முடிக்கு அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது தொடர்பான வழக்கில், பதிலளிக்க ஆளுநர் ரவிக்கு நாளை வரை உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

பொன்முடிக்கு அமைச்சர் பதவியினை பிரமாணம் செய்ய ஆளுநர் மறுப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் பார்வதிவாலா ஆகியோர் அமர்வு விசாரித்தது.

அப்போது உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதால் பொன்முடி எம்.எல்.ஏவாக தொடர்கிறார் எனவும்; ஆனால், பொன்முடிக்கு அமைச்சருக்கான பதவிப் பிரமாணத்தை செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி மறுக்கிறார். மேலும், 72 ஆண்டுகளில் எந்த ஆளுநரும் இவ்வாறு நடந்துகொண்டது இல்லை என மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பி, பொன்முடிக்கு ஆதரவான தன் வாதத்தை முன்வைத்தார். 

அப்போது பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ‘’தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு குறித்து நாங்கள் தீவிர கவலை கொண்டுள்ளோம். ஆளுநர் ரவி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியுள்ளார். பொன்முடிக்கு, பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியாது என்று சொல்வது அவருடைய வேலை அல்ல. இல்லையென்றால், நாங்கள் அதை இப்போது சொல்லப்போவதில்லை.

ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என முதலமைச்சர் கூறினால், ஜனநாயக முறைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்.

அந்த நபர்/ அமைச்சர் குறித்து எனக்கு மாறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனப்படியே நாம் செயல்பட வேண்டும். ஆளுநர் என்பவர் மாநிலத்தின் சம்பிரதாய தலைவர் மட்டுமே. பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூறினால், அதை எப்படி அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று ஆளுநர் கூறமுடியும்?.

உங்கள் ஆளுநர் ரவி என்ன செய்துகொண்டிருக்கிறார்? உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் ரவி மறுப்பது ஏன்?. நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப் பிரமாணம் செய்யமுடியாது எனக் கூறமுடியும்?. தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநர் ரவிக்கு தெரியாதா? உச்ச நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம். பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூறினால், அதை எப்படி அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று ஆளுநர் கூற முடியும்'' என்றார். 

மேலும் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், ‘’பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் அளித்தது யார்?; ஆளுநர் தன் முடிவை அறிவிக்காவிடில் எங்கள் நடவடிக்கை என்ன என்பதை தற்போது நாங்கள் கூறப்போவதில்லை. ஆளுநருக்கு சட்டம் தெரியுமா? தெரியாதா?. அரசியல் சாசனத்தை ஆளுநர் பின்பற்றவில்லை எனில், மாநில அரசு என்ன செய்யும்'’என ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கண்டிப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதி பார்திவாலா கூறுகையில், ‘’ஒரு தண்டனைக்குத் தடை விதிக்கப்பட்டால், அங்கு தண்டனை இல்லை என்றுதான் பொருள். தண்டனையே அங்கு இல்லாதபோது கறைபடிந்தவர் என்று சொல்ல முடியாது. எந்த களங்கமும் இதில் இல்லை’’ என்று பேசினார்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்