தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji: செந்தில் பாலாஜியின் உடல் நிலை அறுவை சிகிச்சைக்கு தயாரா- என்ன சொல்கிறது காவேரி மருத்துவமனை!

Senthil Balaji: செந்தில் பாலாஜியின் உடல் நிலை அறுவை சிகிச்சைக்கு தயாரா- என்ன சொல்கிறது காவேரி மருத்துவமனை!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 16, 2023 01:49 PM IST

தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை ஒரு மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி (HT_PRINT (PTI))

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் தற்போது அவரது உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை ஒரு மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை இதய அறுவை சிகிச்சை செய்ய தயாராக உள்ளதா என மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். மேலும் விரைந்து அறுவை சிகிச்சை செய்ய இதயவியல் நிபுணர் ரகுராம் தலைமயினான குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது வழக்கறிஞர் செங்கோட்டையன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கல் வெளியானது.

அமலாக்கத்துறை சோதனை

கடந்த 13ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூரில் உள்ள இல்லங்கள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறைகளில் அமலாகத்துறையினர் தொடர் சோதனைகளை நடத்தினர். மேலும் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அவரது சகோதரர் அசோக்கின் வீடு, ராயனுரில் உள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்பவரிடன் வீடு உட்பட 8 இடங்களில் சோதனை நடத்தினர்.

மருத்துவனையில் சிகிச்சை

அமலாகத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில் நேற்று முன் தினம் அதிகாலையில் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே உள்ள அறையில் அமலாகத்துறை அதிகாரிகள் மற்றும் சி.ஆர்.பி.எஃப் போலீசாரும் காத்திருக்கின்றனர்.

பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரை

செந்தில் பாலாஜிக்கு காலையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவனை நிர்வாகமும், ஈ.எஸ்.ஐ மருத்துவமனை நிர்வாகமும் பரிந்துரை செய்திருந்தனர். நேற்று காலை சிகிச்சையில் இருந்த செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசிய நிலையில் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து நாளை திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

நேற்று மாலை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர் அமலாக்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைப்படி வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டு சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

காவிரிக்கு மாற்றக் கோரி வாதம்

செந்தில் பாலாஜி மனைவி மேலகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷா பானு, வரதன் சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

இதில் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவனையில் சிகிச்சை பெறும் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆழ்வார் பேட்டியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றகோரி செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களை முன் வைத்தது. ஏற்கெனவே அமைச்சர் செந்தில் பாலாஜி காவிரி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும், இதய வால்வுகளில் அடைப்புகள் உள்ளதால் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. அவருக்கு மருத்துவ சிகிச்சைகளை எய்ம்ஸ் மருத்துவக்குழு மேற்கொள்ள வேண்டுமென வாதிடப்பட்டது.

காவிரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அமைச்சர் செந்தில் பாலாஜியை காவிரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி தந்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சையை அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவக்குழுவும் ஆராயலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நேற்று இரவு சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவ மனையில் இருந்து ஆழ்வார் பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்