தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji Arrest: செந்தில் பாலாஜிக்கு 3 ரத்த குழாய்களில் அடைப்பு; பைபாஸ் சர்ஜரிக்கு பரிந்துரை!

Senthil Balaji Arrest: செந்தில் பாலாஜிக்கு 3 ரத்த குழாய்களில் அடைப்பு; பைபாஸ் சர்ஜரிக்கு பரிந்துரை!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 14, 2023 12:20 PM IST

ஆன்சியோ பரிசோதனையில் 3 அடைப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி (HT_PRINT (ANI))

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று காலை 10.40 மணிக்கு செய்யப்பட்ட ஆன்சியோ பரிசோதனையில் 3 அடைப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம் அமைந்துள்ள கிரீன் வேஸ்சாலையில் சோதனையை தொடர்ந்தனர். இதன் தொடர்ச்சியாக அவரது பட்டினப்பாக்கம் இல்லம், அவரது சகோதருக்கு சொந்தமான இடங்கள், செந்தில் பாலாஜியின் கரூர் இல்லம் என பல இடங்களில் சோதனை தொடர்ந்தது. பிற்பகலில் தலைமைச்செயலகத்தில் 6 ஆண்டுகளுக்கு பின் நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி அறையில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதையடுத்து தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பல்வேறு அமைச்சர்கள் மருத்துவமனைக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது இதய செயல்பாடு இயல்பான நிலைக்கு திரும்பு வரும் வரை ஓரிரு நாட்கள் மருத்துவ கண்காணிப்பு தேவை. அவரது உயர் ரத்த அழுத்தம் 160/100 ஆக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் நீதிமன்றத்தில் ஆட்கொண்ர்வு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்