தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ops Conference : ஓபிஎஸ் மாநாட்டை அச்சுறுத்தும் மழை! தொண்டர்கள் திக்! திக்!

OPS Conference : ஓபிஎஸ் மாநாட்டை அச்சுறுத்தும் மழை! தொண்டர்கள் திக்! திக்!

Priyadarshini R HT Tamil
Apr 24, 2023 10:39 AM IST

Trichy OPS Conference : திருச்சியில் இன்று மாலை ஓபிஎஸ் அணியினரின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் நேற்றுபோல் இன்றும் கனமழை வந்துவிடுமோ என ஓபிஎஸ் தொண்டர்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருச்சியில் மாநாட்டு மேடை மற்றும் பந்தலை பார்வையிட்டு ஆய்வு செய்யும் ரவீந்திரநாத் எம்பி
திருச்சியில் மாநாட்டு மேடை மற்றும் பந்தலை பார்வையிட்டு ஆய்வு செய்யும் ரவீந்திரநாத் எம்பி

ட்ரெண்டிங் செய்திகள்

திருச்சியில் ரயில்வே துறைக்கு சொந்தமான பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் கடந்தவாரம் தொடங்கினர். ஓபிஎஸ் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் கு.ப.கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அங்கேயே முகாமிட்டு கட்சி கொடிகள், மாநாட்டு மேடை, பதாகைகள் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தினர். மாநாட்டு மேடையின் முகப்பு அதிமுக தலைமை அலுவலகம் போல் வடிவமைக்கப்பட்டது. இதனை மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் கூறும்போது, அதன்பின் செய்தியாளர்களிடம் கூறும்போது, 1956ல் அண்ணா நடத்திய மாநாடுக்குப்பின் திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் நடத்தக்கூடிய இந்த மாநாடு புதிய வரலாற்றை உருவாக்கும் என கருத்து தெரிவித்திருந்தார். இதனால் ஓபிஎஸ் அணியினர் உற்சாகத்தில் இருந்தனர்.

இந்த சூழலில் ஓபிஎஸ் அணியினருக்கு புதிய தலைவலி உருவாகியுள்ளது. இத்தனை நாட்களாக திருச்சியில் கோடை வெயில் கொளுத்தியது. இந்நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை திடீரென கன மழை பெய்தது. குறிப்பான மாநாடு நடைபெறவுள்ள ஜி-கார்னர் மற்றும் அதனைச்சுற்றிய பகுதிகளில் நீண்டநேரம் மழை பெற்ததால், இறுதி கட்டப்பணிகளை இறுதிகட்ட பணிகளை மேற்கொள்வதில் ஓபிஎஸ் அணியினருக்கு சிரமம் ஏற்பட்டது. எனவே இன்று அதிகாலை முதல் விடுபட்ட பணிகளை வேகவேமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைபெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே நேற்று போலவே இன்று மாலையும் திருச்சியில் திடீர் கன மழை பெய்தால் மாநாட்டை நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் ஓபிஎஸ் தரப்பினர் அச்சத்தில் உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் மழை வந்துவிடக்கூடாது என அவர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்த சூழலில் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தற்போதே தொண்டர்கள் வரத்துவங்கி விட்டனர். முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக வழி நெடுகிலும் ஏராரளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

மாநாட்டில் பங்கேற்பதற்பாக ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் எம்பி ஆகியோர் நேற்று நள்ளிரவில் திருச்சி வந்து சேர்ந்துள்ளனர். இன்னும் சில மணிநேரத்தில் மாநாட்டுத்திடல் களை கட்டத்துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்