தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Practical Exam: பிளஸ் 1 அரியர் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு எப்போது?

Practical Exam: பிளஸ் 1 அரியர் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு எப்போது?

Priyadarshini R HT Tamil
Feb 11, 2023 12:43 PM IST

பிளஸ் 1 பொதுத்தேர்வின் போது செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல் தற்போது பள்ளியில் பிளஸ் 2 பயிலும் அரியர் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. மார்ச் 1 முதல் 9ம் தேதி வரை அவர்களுக்கு தேர்வு நடத்தி முடித்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

பிளஸ் 1 பொதுத்தேர்வின் போது செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல் தற்போது பள்ளியில் பிளஸ் 2 பயிலும் அரியர் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. இந்நிலையில், அதற்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை பிப்.22ம் தேதி முதல் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சே துராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 1 பொதுத்தேர்வின்போது செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல் தற்போது பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு பயிலும் அரியர் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி தலைமையாசிரியர்கள் அரியர் மாணவர்களுக்கான பிளஸ் | செய்முறைத் தேர்வு வெற்று மதிப்பெண் பட்டியல்களை பிப். 22ம் தேதி முதல் https://dge1.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

அதன்பின், பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 2 அரியர் மாணவர்களுக்கும் இந்த நாள்களிலேயே செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்க வேண்டும். மேலும், செய்முறைத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை பதிவுசெய்த பட்டியல்களை தொகுத்து அந்தந்த மாவட்ட தேர்வுத் துறை அலுவலகங்களில் மார்ச் 11ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

இதுசார்ந்து அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்