தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Plus 2 Students Suffered Of No Bus Service To The Examination Centre

‘பஸ் வசதி இல்லை‘ பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச்சென்ற மாணவர்கள் அவதி

Priyadarshini R HT Tamil
Mar 13, 2023 12:34 PM IST

Public Exam : பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வு மையத்திற்கு நேரடி பேருந்து வசதி இல்லாததால் அன்னமங்கலம் தேர்வு மையத்திற்கு செல்வதில் சிரமமடைந்தனர். இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்து அவர்கள் தேர்வு மையங்களை அடைந்தார்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் இந்த கல்வியாண்டுக்கான (2022-2023) பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று துவங்கியது. ஏப். 3ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 3,225 மையங்களில் மொத்தம் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.

பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வு மையத்திற்கு நேரடி பேருந்து வசதி இல்லாததால் அன்னமங்கலம் தேர்வு மையத்திற்கு செல்வதில் சிரமமடைந்தனர். இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்து அவர்கள் தேர்வு மையங்களை அடைந்தார்கள்.

வேப்பந்தட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத தயாராக இருந்தனர். அவர்களுக்கான தேர்வு மையம் வேப்பந்தட்டை பகுதிகளில் அல்லாமல், அன்னமங்கலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அன்னமங்கலம் தேர்வு மையம் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. 

இன்று அங்கு பிளஸ் 2 தேர்வு எழுதச்சென்ற மாணவர்கள் சரியான பேருந்து வசதிகள் இல்லாததால் சிரமம் அடைந்தனர். மேலும் மாணவர் 4 பேர் வரை ஆபத்தான முறையில் பைக்கில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் சிரமும், சோர்வும் அடைந்தனர். எனவே மாணவர்களும், பெற்றோரும், சமூக ஆர்வலர்களும் பள்ளியிலேயே தேர்வு மையம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கோரியுள்ளோம். அடுத்த முறை முதல் தேர்வு மையம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.    

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்