தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘மீண்டும் கொரோனா’ காய்ச்சலால் உயிரிழந்த திருச்சி வாலிபருக்கு கோவிட் தொற்றா?

‘மீண்டும் கொரோனா’ காய்ச்சலால் உயிரிழந்த திருச்சி வாலிபருக்கு கோவிட் தொற்றா?

Priyadarshini R HT Tamil
Mar 11, 2023 11:40 AM IST

Trichy Fever Dead: அண்மையில் கோவா சென்றுவிட்டு திரும்பிய வாலிபர் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு இறந்துவிட்டார். அவர் கோவிட் பாதிப்பால் உயிரிழந்தாரா என மருத்துவர்கள் பரிசோதனைகள் நடத்தி வருகிறார்கள்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

அதிலிருந்து தொடர் காய்ச்சல், தலைவலியால் அவதிப்பட்டு வந்த அவரை, தனியார்மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துவிட்டார். அது கோவிட் தொற்றாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அது என்ன வகையானகாய்ச்சல் என்பதை, அரசு மருத்துவ குழுவினர்விரைவில் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

தமிழகத்தில்தற்போது மாசி திருவிழாக்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. மேலும் ஹெச்3என்2 சீசன் இன்புளுயன்சா வைரஸ் கடுமையாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இப்போது கோவிட் தொற்றுக்கான நடைமுறைகளும் செயல்பாட்டில் இல்லை. அதனால் மக்கள் யாரும் முகக்கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். 

இதனால் திருவிழாக்கள், விழாக்கள் என கூட்டமாக கலந்துகொண்டு வருகின்றனர். ஏற்கனலே மத்திய அரசு ஹெச்3என்2 வைரஸ் அதிகமான பரவி வரும் நிலையில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்துவிட்டதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மக்களும் ஆங்காங்கே தொடர் காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, சோர்வு போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நடைமுறைகள் இல்லாததால் அவர்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.மேலும் அதனுடன் கோவிட் தொற்றும் பரவி வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தொடர்ந்து மக்கள் யாரும் அலட்சியமாகஇருக்க வேண்டாம். முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். முடிந்தவரை அவசியமற்ற பயணங்களை தவிருங்கள். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தாமல், தாமதிக்காமல் அருகிலுள்ள மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளுங்கள் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

திருச்சியில் இன்று நடந்த உயிரிழப்புக்கு காரணம் கோவிட்டாக இருக்கும் என்ற சந்தேகத்தில் மருத்துவர்கள் அந்த நபருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தினரையும் தனிமைபடுத்தி, அவர்களுக்கும் தேவையான அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்