தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Parliament Election 2024 : பாராளுமன்றத் தேர்தல் - தமிழக வேட்பாளர்களின் பின்னணி என்ன தெரியுமா?

Parliament Election 2024 : பாராளுமன்றத் தேர்தல் - தமிழக வேட்பாளர்களின் பின்னணி என்ன தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Apr 12, 2024 06:11 PM IST

Parliament Election 2024 : Tamilnadu Election Watch மற்றும் ADR, மொத்தமுள்ள 950 வேட்பாளர்களில், 945 பேர் அளித்துள்ள தகவலின் அடிப்படையில், 39 தொகுதிகளில் போட்டியிடும் 138 வேட்பாளர்கள் (15 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் (Criminal cases) இருப்பதாகவும் தகவல் உள்ளது.

Parliament Election 2024 : பாராளுமன்றத் தேர்தல் - தமிழக வேட்பாளர்களின் பின்னணி என்ன தெரியுமா?
Parliament Election 2024 : பாராளுமன்றத் தேர்தல் - தமிழக வேட்பாளர்களின் பின்னணி என்ன தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

மொத்தமுள்ள 950 வேட்பாளர்களில், 945 வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ள தரவுகளில் உள்ள புள்ளிவிவரங்களில் இருந்து ADR இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

அ.தி.மு.க. வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு – ரூ.37.53 கோடி. இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் 34 வேட்பாளர்களில், 33 பேர்களின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியை தாண்டி உள்ளது.

தி.மு.க. வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு – ரூ. 31.22 கோடி.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் 22 வேட்பாளர்களில், 21 பேரின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியை தாண்டியுள்ளது.

தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு – ரூ.38.93 கோடி. அவர்களில் 22 பேரின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியை தாண்டியுள்ளது.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 38 சதவீத வேட்பாளர்களின் சொத்து ரூ.1 கோடியை தாண்டி உள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு-ரூ.24.18 கோடி.

சுயேச்சையாக தாக்கல் செய்த 606 பேரில் 62 பேர்களின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியை தாண்டி உள்ளது.

அனைத்து வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு – ரூ.4.24 கோடி.

Tamilnadu Election Watch மற்றும் ADR, மொத்தமுள்ள 950 வேட்பாளர்களில், 945 பேர் அளித்துள்ள தகவலின் அடிப்படையில், 39 தொகுதிகளில் போட்டியிடும் 138 வேட்பாளர்கள் (15 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் (Criminal cases) இருப்பதாகவும் தகவல் உள்ளது.

இவர்களில் 81 பேர் மீது (9 சதவீதம்) தீவிர குற்றவியல் வழக்குகள் (Serious Criminal Cases) உள்ளதாக தெரியவந்துள்ளது. (இவ்வழக்குகளில் அவர்கள் தண்டனை பெற்றால், அது 5 ஆண்டு சிறை செல்ல வேண்டியிருக்கும்)

தீவிர குற்றவியல் வழக்குகளில் இருப்போருக்கு பிணை கூட எளிதில் கிடைக்காது.

சிலர் மீது RPA act (section 8)ன் கீழ் வழக்குகள் உள்ளன.

மொத்தமுள்ள 9 காங்கிரஸ் வேட்பாளர்களில் 7 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. 2 பேர் மீது தீவிர குற்றவியல் வழக்குகள் உள்ளன.

மொத்தமுள்ள 23 பா.ஜ.க. வேட்பாளர்களில், 16 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. 9 பேர் மீது தீவிர குற்றவியல் வழக்குகள் உள்ளன.

மொத்தமுள்ள 22 தி.மு.க. வேட்பாளர்களில், 13 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. 6 பேர் மீது தீவிர குற்றவியல் வழக்குகள் உள்ளன.

மொத்தமுள்ள 34 அ.தி.மு.க. வேட்பாளர்களில், 12 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. 6 பேர் மீது தீவிர குற்றவியல் வழக்குகள் உள்ளன.

நாம் தமிழர் கட்சியில், மொத்தமுள்ள 39 வேட்பாளர்களில், 11 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. 6 பேர் மீது தீவிர குற்றவியல் வழக்குகள் உள்ளன.

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களில் 6 பேர் மீதும், தே.மு.தி.க., அ.மு.மு.க., சி.பி.எம்., வி.சி.க கட்சிகளில் தலா ஒரு நபர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளன.

எனவே, குற்றவியல் வழக்குகளில் இருப்பவர்களும், கோடிகளுக்கு அதிபதிகளாக இருப்பவர்களும் தேர்தல் களத்தில் அதிகம் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

IPL_Entry_Point