தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஓபிஎஸ் நீக்கிய சில நிமிடங்களில் ஈபிஎஸை சரணடைந்த செந்தில் முருகன்!

ஓபிஎஸ் நீக்கிய சில நிமிடங்களில் ஈபிஎஸை சரணடைந்த செந்தில் முருகன்!

Kathiravan V HT Tamil
Mar 09, 2023 02:07 PM IST

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் செந்தில் முருகனை வேட்பாளராக அறிவித்து பின்னர் வாபஸ் பெற்றார் ஓபிஎஸ்

ஈபிஎஸ் முன்னிலையில் கட்சியில் இணைந்த செந்தில் முருகன்
ஈபிஎஸ் முன்னிலையில் கட்சியில் இணைந்த செந்தில் முருகன்

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னாள்  முதல்வர்கள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்   -கோப்பு படம்
முன்னாள் முதல்வர்கள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் -கோப்பு படம்

ஓபிஎஸ் உடன் ஜேசிடி பிரபாகரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்.

இந்த பொதுக் குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு சென்றார் ஓபிஎஸ். இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு போட்டியாக செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக ஓபிஎஸ் அறிவித்தார். இதனால் இரட்டை இலை முடங்கும் அபாயம் இருந்ததால் சின்னம் கோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வைத்த கோரிக்கையை ஏற்று வேட்பாளரை வாபஸ் பெற்றார் ஓபிஎஸ்.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனிடையே செந்தில் முருகனை வேட்பாளராக அறிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு கிழக்கு பகுதியில் உள்ள சில நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் செந்தில் முருகனை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கு் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திறகும் மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கழக அமைப்பு செயலாளர் பி. செந்தில் முருகன் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்ற முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த செந்தில் முருகன் அதிமுகவில் இணைந்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்