தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஆன்லைன் ரம்மி தடை மசோதா! ரிஜெக்டு! ரிப்பீட்டு! அமைச்சர் ரகுபதி பேட்டி!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா! ரிஜெக்டு! ரிப்பீட்டு! அமைச்சர் ரகுபதி பேட்டி!

Kathiravan V HT Tamil
Mar 09, 2023 09:59 AM IST

நேற்றைய தினம் ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி இருந்தார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

ட்ரெண்டிங் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தினால் தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணத்தை இழந்த இளைஞர் ஒருவரின் தற்கொலை கவலையை ஏற்படுத்தி இருந்தது.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தடுப்பதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சட்டம் கொண்டு வருவதற்கு சரியான தரவுகள் எதுவும் இல்லை என்று கூறி நீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததுடன் இது போன்ற சட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன் உரிய தரவுகளுடன் வலுவான சட்டங்களாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தலை வழங்கி இருந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பான அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

<p>முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக ஆலோசனை</p>
முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக ஆலோசனை

அதில் இணைய வழி சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி தனது ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை அதே நாளில் அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு
ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு

பள்ளி மாணவர்கள் மீது இணைய வழி விளையாட்டுக்கள் ஏற்படுத்தி உள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வித்துறை மூலமாக கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டு பொதுமக்களிடமும் மின்னஞ்சல் மூலம் கருத்துகள் பெறப்பட்டது.

இவை அடிப்படையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் அதற்கு அன்றைய தினமே ஒப்புதல் அளித்திருந்தார்.

அவசர சட்டத்தை சட்டமாக நிறைவேற்றும் வகையில் கடந்த அண்டு அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் ரம்மி தடை மற்றும் இணையதள விளையாட்டுக்கள் முறைப்படுத்தும் மஒசோதா கொண்டு வரப்பட்டு அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

<p>தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி</p>
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

மேலும் இச்சட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் இச்சட்டை அமலாவதில் தொடர் கால தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து சட்ட அமைச்சர் ரகுபதி சில விளக்கங்களையும் அளித்திருந்த நிலையில் நேற்றைய தினம் ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் “திருப்பி அனுப்பிய மசோதாவை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்துதான் ஆக வேண்டும் என்பது சட்டம், புதியசட்டம் இயற்ற உரிமை உள்ளதாக உயர்நீதிமன்றம் கூறி உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறி உள்ளார். ”

IPL_Entry_Point