‘’ஒப்பந்த அடிப்படையில் புதிய ஊழியரை நியமிக்கக் கூடாது'' - உயர் நீதிமன்றம் அதிரடி
ரயில்வே மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் புதிய ஊழியரை நியமிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் புதிய ஊழியரை நியமிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரயில்வே மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் புதிதாக உதவியாளர்களை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தால் ஏற்கனவே நீக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை ரயில்வே நிர்வாகம் பயன்படுத்தலாம் எனவும்; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 202 ஊழியர்களை மீண்டும் பணியில் ஈடுபடுத்தலாம் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. முன்னதாக, புதிதாக ஒப்பந்த ஊழியர்களை நியமித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9