தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மலைகளின் அரசி Vs மலைகளின் சிற்றரசி! மோதி கொண்ட அமைச்சர்கள்! அவையில் சிரிப்பலை!

மலைகளின் அரசி Vs மலைகளின் சிற்றரசி! மோதி கொண்ட அமைச்சர்கள்! அவையில் சிரிப்பலை!

Kathiravan V HT Tamil
Apr 18, 2023 11:19 AM IST

அமைச்சர் தங்கம் தென்னரசுவின் இந்த சாதூர்யமான பேச்சால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் - சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் - தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் - சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் - தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

ட்ரெண்டிங் செய்திகள்

மலைகளின் அரசி ஊட்டி என்றால், மலைகளின் இளவரசி கொடைக்கானல் என்று சொன்னால் இன்றைக்கு சிறுமலை மலைகளின் சிற்றரசியாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ தூரமுள்ள சிறுமலைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையில் தங்க விடுதி இல்லை, பூங்கா இல்லை. இதற்காக போதுமான இடம் தோட்டக்கலை மற்றும் வனத்துறைக்கு சொந்தமாக உள்ளது என்றார்.

கேள்வியை முடிக்க நீண்ட நேரம் ஆனதால் சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு பதில் சொல்ல அமைச்சரை அழைத்தார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

இதற்கு பதிலளித்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், சிறுமலையில் உயிரியல் பூங்கா அமைக்க வேண்டுமென்றால் அது வனத்துறை மூலம்தான் செய்ய முடியும். பூங்கா அமைக்க தனியாக கருத்துரு அனுப்பினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய நத்தம் விஸ்வநாதன், சுற்றுலா தலமாக அறிவிப்பது கொள்கை முடிவு இல்லை என்று சொன்னால், சுற்றுலாப்பயணிகள் வருவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தருவது முக்கியம். கடம்பான் குளம்-தாளக்கால் வரையிலான சாலையில் புதுப்பிக்க ஊரக வளர்ச்சி துறை சார்பில் நிதி ஒதுக்கி உள்ளது.

ஆனால் வனத்துறை அனுமதி தர மறுக்கிறது. சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சாலை வசதியை செய்ய வனத்துறைக்கு பரிந்துரை செய்து இரண்டு அமைச்சர்கள் கூடி பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் திட்ட அறிக்கை அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நத்தம் விஸ்வநாதன் பேச முயன்ற நிலையில் சபாநாயகர் அடுத்த கேள்விக்கு நகர்ந்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே! மலைகளின் அரசி இருக்கிறது. மலைகளின் இளவரசி கேள்விப்பட்டு இருக்கிறோம். அண்ணன் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் ’மலைகளின் சிற்றரசியை’ கண்டுபிடித்து இருக்கிறார்.

நான் இந்த அவையின் மூலம் கேட்டுக் கொள்வது மலைகளின் அரசி அண்ணன் கா.ராமச்சந்திரனின் ஊர், மலைகளின் சிற்றரசி அண்ணன் நத்தம் விஸ்வநாதனின் ஊர். எனவே ’அரசி சிற்றரசியை கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர் தங்கம் தென்னரசுவின் இந்த சாதூர்யமான பேச்சால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், “அப்போ எங்கள் ஏலகிரி என்னா?” என்று கேட்க அவை முழுவதும் சிரிப்பலையில் மூழ்கியது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்