தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vijayakanth Health: ’விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை! மருத்துவமனை அறிக்கை!’

Vijayakanth Health: ’விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை! மருத்துவமனை அறிக்கை!’

Kathiravan V HT Tamil
Nov 29, 2023 01:21 PM IST

“Vijayakanth Health: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என சென்னை மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது”

விஜயகாந்த் (கோப்புபடம்)
விஜயகாந்த் (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருமல், சளி மற்றும் தொண்டை வலி பாதிப்பு அவருக்கு இருந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக தேமுதிக சார்பில் அப்போது வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி அச்செய்திகளுக்கு தேமுதிக கட்சித் தலைமை மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர்கள் ஓரிருநாளி ல் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் (29-11-2023) அன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை குறித்து புதிய மருத்துவ அறிக்கை ஒன்றை மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதில், விஜயகாந்த் அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல் நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்