தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தமிழிசை ஆளுநரா? பாஜக செய்தித் தொடர்பாளரா? - அமைச்சா் சேகர் பாபு காட்டம்!

தமிழிசை ஆளுநரா? பாஜக செய்தித் தொடர்பாளரா? - அமைச்சா் சேகர் பாபு காட்டம்!

Karthikeyan S HT Tamil
Dec 25, 2023 11:44 AM IST

Sekar Babu vs Tamilisai Soundararajan: தமிழிசை செளந்தரராஜன் ஆளுநர் பணியை பார்த்தால் போதும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் செய்துள்ளார்.

அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்த கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனா்.

அதன் பின்னா் செய்தியாளா்களை சந்தித்த அவர் கூறுகையில், "கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் போது தினசரி 2,310 பேருந்துகள் இயக்கப்படும், 840 ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். அதேபோல், பேருந்து நிலைய வளாகத்திற்குள் மருந்து கடைகள், ஓட்டுநர், நடத்துநர் ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தீயணைப்புத் துறை வண்டிகள் நிறுத்தப்படும். அதேபோல், தனி காவல்நிலையம் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடுத்தாண்டு பொங்கலுக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் எனவும் அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

இதனிடையே, வெள்ள நிவாரண பணிகளில் திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், "தமிழிசை செளந்தரராஜன் பாண்டிச்சேரியுடைய ஆளுநர் பணியை மட்டும் பார்த்தால் போதும். பாஜகவின் செய்தி தொடர்பாளராக செயல்பட வேண்டாம். அவர்களுக்கு இருக்கின்ற பணியை அவர்களை பார்க்கச் சொல்லுங்கள். அவர்களுடைய எதிர்கால திட்டம், தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுவதுதான். நிச்சயமாக எங்கு போட்டியிட்டாலும் ஏற்கனவே தமிழகம் மக்கள் அவருக்கு தோல்வியை தான் பரிசாக கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே தமிழக மக்கள் தோல்வியை பரிசாக கொடுத்தனா். மீண்டும் தோல்வியை தான் பரிசாக தருவார்கள். ஆகவே பாண்டிச்சேரிக்கு உண்டான கவர்னர் அந்த பொறுப்பிற்கு உண்டான பணிகளை மேற்கொண்டால் நல்லது." என்றார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்