தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Assembly: ‘அத்திக்கடவு-அவிநாசி திட்டம் எப்போது நிறைவேறும்?’ செங்கோட்டையன் கேள்விக்கு துரைமுருகன் நச் பதில்!

TN Assembly: ‘அத்திக்கடவு-அவிநாசி திட்டம் எப்போது நிறைவேறும்?’ செங்கோட்டையன் கேள்விக்கு துரைமுருகன் நச் பதில்!

Kathiravan V HT Tamil
Oct 09, 2023 10:49 AM IST

“திட்டத்திற்கு காளிங்கராயன் அணையில் இருந்து 1.5 டிஎம்சி தண்ணீரை பம்ப் செய்து கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இப்போது தண்ணீர் இல்லை”

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் - சபாநாயகர் அப்பாவு - அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் - சபாநாயகர் அப்பாவு - அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன்

ட்ரெண்டிங் செய்திகள்

பின்னர் தொடங்கிய கேள்வி நேரத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன், “முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையில் இருந்தபோது அத்திக்கடவு அவிநாசி திட்டம் 60 ஆண்டுகால விவசாயிகள் கனவுகளை நிறைவேற்றும் வகையில் 1652 கோடி நிதி ஒதுக்கி 80 சதவீத பணிகள் முடிவந்துவிட்டது. எப்போது அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை அறிய விரும்புகிறேன்” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை துவக்கும் அளவுக்கு எல்லா திட்டங்களும் முடிவடைந்துள்ளன. ஆனால் அந்த திட்டத்திற்கு காளிங்கராயன் அணையில் இருந்து 1.5 டிஎம்சி தண்ணீரை பம்ப் செய்து கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இப்போது தண்ணீர் இல்லை; ஆகையால் காளிங்கராயன் அணையில் தண்ணீர் வந்தவுடன் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைப்பார்கள்” என தெரிவித்தார்.

IPL_Entry_Point