தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மீனவர் பலி: தமிழக- கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்; போலீஸ் குவிப்பு!

மீனவர் பலி: தமிழக- கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்; போலீஸ் குவிப்பு!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 17, 2023 12:55 PM IST

Mettur Issue: இரு மாநில எல்லைகளிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் அதிகரித்து வருவதால் இரு மாநில போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த ராஜா
உயிரிழந்த ராஜா

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழக கர்நாடக எல்லையில் உள்ளது பாலாறு வனப்பகுதி. இங்கு காவிரியும் பாலாறும் கலக்கும் இடத்தில் தமிழக மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்ற மீனவர்கள் பாலாற்றில் மீன் பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பாலாற்றங்கரையில் இருந்த பரிசல்களையும் வலைகளையும் கர்நாடக வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில் சிலர் தப்பி கிராமங்களுக்கு சென்று விட்டனர். ஆனால் இந்த சம்பவத்தையடுத்து கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா மட்டும் காணாமல் போயிருந்தார்.

இதனால் கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூட்டில் அவர் பலியாகி இருக்கலாம் என கிராம மக்கள் பாலாற்றங்கரையில் தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவி வந்தது. இதற்கிடையே இன்று காணாமல் போன மீனவர் ராஜா கர்நாடக எல்லையை ஒட்டிய அடிப்பாலாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் பிரேதப்பரிசோதனைக்கு பிறகே ராஜா எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இரு மாநில எல்லைகளிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் அதிகரித்து வருவதால் இரு மாநில போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்