தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  படித்துறை பாண்டி போல் பார்க்கிங் வசூல்! மதுரையை குத்தகை எடுக்கும் மாநகராட்சி?

படித்துறை பாண்டி போல் பார்க்கிங் வசூல்! மதுரையை குத்தகை எடுக்கும் மாநகராட்சி?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 31, 2023 12:44 PM IST

Madurai Parking Collection: கருப்பசாமி குத்தகைதாரர் பட படித்துறை பாண்டி போல் மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் அமைத்து அதற்கு உரிய பண வசூலையும் மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் முடிவு செய்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த பகுதிகளில் சாலையின் இரு பக்கமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பாதசாரிகள் கடும் சிக்கலை சந்திக்க நேர்கிறது. இடநெருக்கடிகளை சமாளிப்பதற்காக மாநகராட்சி சார்பில் பல்வேறு மாற்று ஏற்பாடுகள் செய்தாலும் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பெரியார் பேருந்து நிலையம் அருகே பல்வேறு அடுக்குகள் கொண்ட நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பகுதிகளில் அதிக அளவிலான வணிக நிறுவனங்கள் உள்ளதால் வழக்கத்தை விட எப்போது கூடுதல் வாகனங்கள் இங்கே நிறுத்தப்படுகிறது.

எனவே வாகன நெருக்கடியை குறைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மதுரை மாநகராட்சி பொதுமக்கள் - தனியார் கூட்டு திட்டம் அடிப்படையில் நகரின் முக்கிய பகுதிகளில் கட்டண வாகன நிறுத்துமிடங்களுக்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.

இந்த கட்டண வாகன நிறுத்துமிடத்துக்கான நெறிமுறைகள், நிர்வாக முறைகள் வெளியிடப்பட்டிருப்பதுடன், வாகனம் நிறுத்தும் இடங்கள், நிறுத்தகூடாத இடங்கள் குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட உள்ளது.

இதற்காக டிஜிட்ட் பதாகைகளும் பொருத்தப்படுவதோடு, தற்போது எந்தெந்த இடங்களில் வாகனங்களை நிறுத்த இடம் காலியாக உள்ளன என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வடக்காவணி மூல வீதி பகுதியில் 25 இடங்கள் மற்றும் 40 இடங்களை கொண்ட இருச்சக்கர வாகன நிறுத்துமிடமும், கீழ் ஆவணி மூல வீதியில் 40 இடங்களை கொண்ட இடமும், தெற்காவணி மூல வீதியில் 500 இடங்களை கொண்ட இடமும், மேல ஆவணி மூல வீதியில் 30 இடங்களை கொண்ட இரண்டு நான்கு சக்கர வாகன நிறுத்தும் இடமும், 40 இடங்களை கொண்ட வாகன நிறுத்தும் இடமும் உருவாக்கப்பட உள்ளது. இதேபோல் அனைத்து மாசி வீதிகளிலும் பைக் மற்றும் கார் பார்க்கிங் நிறுத்துவதற்கான இடங்கள் உருவாக்கப்பட உள்ளன.

இதில் இருசக்கர வாகனத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 10, நான்கு சக்கர வாகனத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 25 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. மாத கட்டணமாக இருசக்கர வாகனத்துக்கு ரூ. 500, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ. 2000, ஆண்டுகட்டணமாக ரூ. 4,200, ரூ. 16, 800 வசூலிக்க மதுரை மாநகராட்சி சார்பில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கருப்பசாமி குத்தகைதாரர் என்ற படத்தில் நடிகர் வடிவேலு மதுரை முழுவதுமே குத்தகை எடுத்திருப்பதாகவும், வண்டி எங்கு நிறுத்தினாலும் காசு கொடுக்க வேண்டும் என கூறுவார். அதேபோல் மதுரையிலுள்ள வாகன நெரிசல் மிகுந்த முக்கிய பகுதிகளில் வாகனம் நிறுத்துமிடம் அமைத்து, அதற்கு வசூலும் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

IPL_Entry_Point