தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rte:தனியார் பள்ளிகளில் இலவச கல்வி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - விண்ணப்பிப்பது எப்படி?

RTE:தனியார் பள்ளிகளில் இலவச கல்வி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - விண்ணப்பிப்பது எப்படி?

Karthikeyan S HT Tamil
May 18, 2023 08:39 AM IST

Free Education: இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் (மே 18) நிறைவுபெறுகிறது.

பள்ளி மாணவிகள்
பள்ளி மாணவிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். அந்த வகையில் மாநிலம் முழுவதும் உள்ள 7,738 தனியாா் பள்ளிகளில் சுமாா் 83 ஆயிரத்து 378 இடங்கள் உள்ளன.

இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை 3.98 லட்சம் குழந்தைகள் தனியாா் பள்ளிகளில் படித்து வருகின்றனா்.

இந்தத நிலையில் வரும் கல்வியாண்டு (2023-2024) இலவச மாணவார் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 872 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையே விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மே 18) நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ள பெற்றோா்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதன்படி, ஒரு பெற்றோா் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். 

பள்ளியில் நிா்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள். சோ்க்கை தொடா்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் பள்ளிக் கல்வியின் உதவி மைய எண்ணுக்கு 14417 தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்