தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Parandur Airport: பரந்தூர் விமான நிலையம்..நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

Parandur Airport: பரந்தூர் விமான நிலையம்..நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

Karthikeyan S HT Tamil
Nov 24, 2023 02:52 PM IST

பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பரந்தூர் (கோப்புபடம்)
பரந்தூர் (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அண்மையில் நிர்வாக அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை கண்டித்து அந்தப் பகுதி மக்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணையும் பிறப்பித்துள்ளது. பரந்தூர் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் விமான நிலைய பணிகளுக்கு நிலம் எடுப்பதற்கான நிர்வாக அனுமதியை தமிழக அரசு வழங்கி உள்ளது.

நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக ரூ.19.24 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மச்சேந்திரநாதன் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த நிலையில் அரசாணை பிரப்பிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தாலூக்காவில் உள்ள 20 கிராமங்களில் நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்