தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kodanad Caseகோடநாடு வழக்கில் இன்றும் இடைக்கால அறிக்கை தாக்கல் இல்லையாம்!

Kodanad Caseகோடநாடு வழக்கில் இன்றும் இடைக்கால அறிக்கை தாக்கல் இல்லையாம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 28, 2023 11:38 AM IST

மேற்கு வங்கம், கேரளம், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு சிறப்பு குழு சென்றுள்ளது. மேலும் செல்போன் ஆதாரங்களைத் திரட்ட கால தாமதம் ஏற்பட்டுள்ளது-சிபிசிஐடி

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு

ட்ரெண்டிங் செய்திகள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பலரிடம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜூலை 28ம் தேதி ஒரு இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று சிபிசிஐடி தரப்பில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு தொடர்பாக 3 மாநிலங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேற்கு வங்கம், கேரளம், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு சிறப்பு குழு சென்றுள்ளது. மேலும் செல்போன் ஆதாரங்களைத் திரட்ட கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இடைக்கால அறிக்கையை இன்று சமர்ப்பிக்க இயல்வில்லை. கண்டிப்பாக 8ம் தேதி 9ம் மாதத்தில் சமர்ப்பிக்கிறோம் என்றனர்.

இதையடுத்து நீதிபதி கடந்த ஆண்டு இதே தேதி நான் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க சொல்லி இருந்தேன். ஓராண்டு கடந்தும் இடைக்கால அறிக்கையை கூட தாக்கல் செய்ய தாமதமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்