தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Puducherry: இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல்-16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

Puducherry: இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல்-16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 15, 2023 11:07 AM IST

தற்போது 1முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவதாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்

புதுச்சேரி அரசு தலைமை செயலகம்
புதுச்சேரி அரசு தலைமை செயலகம்

ட்ரெண்டிங் செய்திகள்

புதுச்சேரியில் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த தனியாக வார்டு அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முககவசம் அணிவது கட்டாயம் அன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் 1 முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 16ம் தேதி முதல் 26ம் தேதிவரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் இருமல் காரணமாக பள்ளியில் மற்ற மாணவர்களுக்கு எளிதில் நோய் தொற்றும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது 1முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவதாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே H3N2 இன்புளுயன்சா வைரசுக்கு கர்நாடகா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் H3N2 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவல் இந்தியாவில் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பரவி வரும் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை மாநிலங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்