தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அக்னிவீர் திட்டத்தில் ஆள் சேர்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

அக்னிவீர் திட்டத்தில் ஆள் சேர்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Priyadarshini R HT Tamil
Feb 17, 2023 01:23 PM IST

Join Indian Army: அக்னிபாத் திட்டத்தின்கீழ் 2023-24ம் ஆண்டுக்கான அக்னிவீர்சேர்க்கைக்கான தேர்வுக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியராணுவத்தில் தேர்வு நியாயமானது, வெளிப்படையானது மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும். இந்திய ராணுவத்தில் தேர்வு அல்லது ஆட்சேர்ப்புக்கு எந்த நிலையிலும் யாருக்கும்லஞ்சம் கொடுக்கப்பட மாட்டாது. ஆட்சேர்ப்பு முகவர்களாக காட்டிக் கொள்ளும் நேர்மையற்ற நபர்களுக்கு வேட்பாளர்கள் இரையாகிவிடக்கூடாது.

அக்னிபாத் திட்டம் என்றால் என்ன?  

அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இது கடற்படை, விமானப்படை மற்றும் ராணுவம் ஆகிய மூன்றுக்கு இளமையான வீரர்களை கொடுக்கும் திட்டமாகும். நான்கு ஆண்டுகளுக்கு இளைஞர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். அவர்கள் அக்னிவீர் என்று அழைக்கப்படுவார்கள். ஆண், பெண் இருபாலரும் இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர முடியும். அவர்களின் வயது 17 முதல் 21க்குள் இருக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். 

இத்திட்டத்தின்படி ,ராணுவத்தில் பணியில் சேரும் வீரர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் கூடுதல் வாய்ப்பை பெறுவார்கள். எஞ்சிய 75 சதவீதம் பேர் பணியில் இருந்து வெளியேற வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தற்போது உள்ள ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைவிட, மூன்று மடங்கு கூடுதல் ராணுவ வீரர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்