தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Salem: மர்மமான முறையில் காவலாளி கொலை - பீகாருக்கு தப்ப முயன்ற வாலிபர் கைது

Salem: மர்மமான முறையில் காவலாளி கொலை - பீகாருக்கு தப்ப முயன்ற வாலிபர் கைது

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 11, 2023 11:37 AM IST

பருப்பு மில்லில் ரூ.25 ஆயிரம் திருட்டு போயிருந்ததால் அந்த வாலிபர் தான் காவலாளி தங்கையனை கொலை செய்துவிட்டு பணத்தை திருடி சென்றிருக்கலாம் என காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.

கொலை
கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கையன் (வயது 58). இவர் லீ பஜார் பகுதியில் உள்ள ஒரு தனியார் பருப்பு மில்லில் கடந்த 4 ஆண்டுகளாக காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கையன் பருப்பு மில்லில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொலை சம்பவம் நடந்த அன்று இரவு சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

இதற்கிடையில் பருப்பு மில்லில் ரூ.25 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இதனால் அந்த வாலிபர் தான் காவலாளி தங்கையனை கொலை செய்துவிட்டு பணத்தை திருடி சென்றிருக்கலாம் என காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்தொடர்ந்து விசாரித்த போது, அவர் பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்த அமர்ஜித்குமார் என்கிற சோனுகுமார் (19) என்பது தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் உதவி ஆணையர் நாகராஜன் தலைமையில் கொண்ட தனிப்படையினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் ரயில் மூலம் தனது சொந்த ஊரான பீகாருக்கு தப்பி செல்வதற்காக சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்த சோனுகுமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் காவலாளி தங்கையனை கொன்று அங்கிருந்த ரூ.25 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் கைது செய்யப்பட்ட சோனுகுமாரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்