தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Virudhachalam :கால்வாயில் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து - 60 பேரின் நிலை என்ன?

Virudhachalam :கால்வாயில் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து - 60 பேரின் நிலை என்ன?

Divya Sekar HT Tamil
Jan 23, 2023 12:24 PM IST

விருத்தாசலம் அருகே சோமங்கலம் கிராமத்தில் அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

ட்ரெண்டிங் செய்திகள்

சேப்பாக்கம் இருந்து விருத்தசலத்துக்கு சென்ற அரசு பேருந்தை ஓட்டுநர் சரவணன் இயக்கி வந்தார். இதில் 60-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தார். 

விருத்தாசலம் நோக்கி வரும் போது கோமங்கலம் கிராமத்தை கடக்கும் போது எதிரே நெல் அறுவடை இயந்திரம் வந்ததால் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்தில் இருந்த பயணிகள் உள்ளே இருந்து கத்தினர். சத்தம் கேட்டு அருகே உள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து அந்த பேருந்தில் இருந்த பயணிகளை வெளியேற்றினர். 

பின்னர் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்துறை, காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பயணிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்