தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Erode East Bypoll: Sanjay Sampad Wishes To Contest In The By-election!

Erode East bypoll: இடைத்தேர்தலில் போட்டியிட சஞ்சய் சம்பத் விருப்ப மனு!

Manigandan K T HT Tamil
Jan 22, 2023 01:30 PM IST

Erode East bypoll: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது.

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சஞ்சய் சம்பத் (வலது)
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சஞ்சய் சம்பத் (வலது)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த இடைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட காங்கிரசுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், ஈரோடு இடைத்தேர்தலில் யாரை நிறுத்தலாம் என்பது குறித்து கட்சியின் நிர்வாகிகளுடன் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சஞ்சய் சம்பத் விருப்ப மனு

இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் விருப்ப மனு கொடுத்துள்ளார். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் சஞ்சய் சம்பத் விருப்ப மனு அளித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜனும் கோரியிருக்கிறார். இதனால், யார் வேட்பாளர் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

காங்கிரஸ் வெற்றி பெறும்-தினேஷ் குண்டுராவ் பேட்டி

இதனிடையே, காங்கிரஸ் தலைமை தான் யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பது குறித்து முடிவு செய்யும் என்று தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நிலையில், தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது “இன்னும் ஓரிரு நாட்களில் காங்கிரஸ் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். காங்கிரஸ் தான் இடைத்தேர்தலில் ஜெயிக்கும்” என்றார்.

இ.வி.கே.எஸ். இளங்கோவனின் மூத்த மகனும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்