தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode East Bypoll: ஈரோடு இடைத்தேர்தல்-பின்வாங்கியதா பாஜக?-அண்ணாமலை பேட்டி

Erode East bypoll: ஈரோடு இடைத்தேர்தல்-பின்வாங்கியதா பாஜக?-அண்ணாமலை பேட்டி

Manigandan K T HT Tamil
Jan 23, 2023 12:22 PM IST

Annamalai: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுகிறதா இல்லையா என்பது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை (கோப்புப் படம்)
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை (கோப்புப் படம்) (L. Anantha Krishnan)

ட்ரெண்டிங் செய்திகள்

ஈரோடு கிழக்கு தேர்தல் விவகாரத்தில் பாஜகவை பொறுத்தவரை நாங்கள் முதலில் இருந்தே கூறிவருகிறோம். இதில் எந்தவொரு குழப்பமும் இல்லை. எங்கள் கூட்டணி பெரிய கட்சி என்பது அதிமுகதான்.

ஈரோடில் பல முறை எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் அங்கே இருக்கிறார்கள். ஈரோட்டில் இருந்து அமைச்சரானவர்களும் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில், அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதேநேரம், எங்கள் அலுவலகத்திற்கு ஓபிஎஸ்ஸும் வந்து சென்றார். சில விஷயங்களை நான் பேசியிருக்கிறேன். அதிமுக சார்பில் நிறுத்தப்படக் கூடிய வேட்பாளர் சரியான வேட்பாளராக இருக்க வேண்டும்.

பணபலம், படை பலத்தை தாண்டி ஜெயிக்க வேண்டும். திமுக நிச்சயம் அதிகாரிகளை சாதகமாக பயன்படுத்துவார்கள். அதையெல்லாம் எதிர்க்கக் கூடிய ஒரே ஒரு வேட்பாளர் அங்கு நிற்க வேண்டும். இதுதான் எனது நிலைப்பாடும் தமிழக பாஜக நிலைப்பாடும் ஆகும்.

அதேநேரம், அடுத்த 12-13 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. மிக அருகில் உள்ளது. அதனால், நல்ல முடிவு மிக விரைவில் எடுக்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொருத்தவரை பலம் வாய்பந்த நல்ல வேட்பாளர் போட்டியிட வேண்டும். அந்த வேட்பாளர் ஜெயிக்க வேண்டிய அனைத்து ஆதரவையும் கொடுக்க வேண்டியது எங்கள் கடமை. பாஜக தொண்டர்கள் விரும்பினாலும் கூட நமது பலம் என்ன என்பது நமக்கு தெரியும்.

வாக்குகள் பிரியும் போது என்ன நடக்கும் என்பதும் நமக்கு தெரியும். நமது கூட்டணியில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். நம்மிடம் தொலைபேசி மூலமாகவும் அலுவலகம் வந்தும் பேசியிருக்கிறார்கள். எனவே, ஏற்கனவே கூறியபடி நேரம் வரும்வரை காத்திருங்கள் என்றார் அண்ணாமலை.

முன்னதாக, திங்கட்கிழமை முதல் 26.1.2023 மாலை வியாழக்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் 5 மணிவரை, விண்ணப்பக் கட்டணத் தொகையாக 15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) ரூபாயை செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர், விருப்பமனுத்தாக்கல் செய்ய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்