தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  திமுக கவுன்சிலரிடம் கேள்வி கேட்ட பொது மக்களுக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா?

திமுக கவுன்சிலரிடம் கேள்வி கேட்ட பொது மக்களுக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா?

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 11, 2023 12:20 PM IST

திமுக கவுன்சிலர் மோகன் தாக்கியத்தில் படுகாயமடைந்த மூவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்
தாக்குதலில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்துள்ள கொண்டையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி கார்டன் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களிடையே புகார் எழுந்தது. இந்த நிலையில் நேற்றிரவு லட்சுமி கார்டன் பகுதியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 9 வது வார்டு திமுக கவுன்சிலர் மோகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை உள்ளது என்று புகார் கூறினர். இதனால் திமுக கவுன்சிலர் மோகன் தரப்பை சேர்ந்த ஆட்கள் சிலருக்கும், கேள்வியெழுப்பிய இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் திமுக கவுன்சிலர் மோகன் கேள்வி கேட்டவர்களை சரமாரியாக தாக்கி தொடங்கினார். இதை எதிர்பாராத இளைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர. திமுக கவுன்சிலர் மோகன் தாக்கியத்தில் படுகாயமடைந்த மூவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே திமுக கவுன்சிலர் பொதுமக்களை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தவறை தட்டி கேள்வி கேட்டவர்களை தாக்கிய கவுன்சிலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்