தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cauvery Issue: ‘இத பண்ணா காவிரி பிரச்னை தீரும்!’ ஐடியா கொடுத்த பிரேமலதா! செய்வாரா பிரதமர்?

Cauvery issue: ‘இத பண்ணா காவிரி பிரச்னை தீரும்!’ ஐடியா கொடுத்த பிரேமலதா! செய்வாரா பிரதமர்?

Kathiravan V HT Tamil
Sep 27, 2023 12:00 PM IST

”இதில் இரண்டு கட்சிகளுக்குள் பிரச்னைகள் இல்லை; இரண்டு தலைவர்களுக்கு இடையில்தான் பிரச்னை”

தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்
தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது, தஞ்சாவூரில் விவசாயிகள் விளைவிக்க முடியாத நிலையில் இருப்பது மிக மிக வருத்தம் ஏற்படுகிறது. காவிரி விவகாரத்தை வெறும் அரசியலாக்கி கொண்டிருக்கிறார்களே தவிர இதுவரை யாரும் நிரந்தர தீர்வுக்கான வேலையை யாரும் செய்யவில்லை. இன்றைக்கு தேமுதிக சார்பில் உண்ணாவிரதம் தொடங்கி உள்ளோம். 

பெங்களூருவில் நேற்று பந்த் நடைபெற்றுள்ளது. இங்கு ஆட்சிகள்தான் மாறிக்கொண்டிருக்கிறதே தவிர எந்த காட்சிகளும் மாறவில்லை. டெல்டா காய்ந்து போய் பாலைவனமாக மாறிவிட்டது. இதற்கு உடனடியாக அரசுகள் தலையிட்டு தீர்வு காணவேண்டும்.

கர்நாடகாவில் உடனே எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக போராட்டம் நடத்துகிறார்கள். அந்த ஒற்றுமையை நிரூபித்தால்தான் நமது ஒற்றுமையை நிலைநாட்ட முடியும். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தர வேண்டிய உரிமையை பெற்றுத் தர நடவடிக்கை வேண்டும்

கூட்டணி பிரிந்து இரண்டுநாள்தான் ஆகி உள்ளது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் கிடையாது. இதில் இரண்டு கட்சிகளுக்குள் பிரச்னைகள் இல்லை; இரண்டு தலைவர்களுக்கு இடையில்தான் பிரச்னை நடந்துள்ளது. 

இன்னும் தேர்தலுக்கு 7 மாதங்கள் உள்ளது. யார் தலைமையில் என்ன கூட்டணி அமைய போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். உரிய நேரத்தில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை கேப்டன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

காவிரி பிரச்னை தீர வேண்டும் என்றால் நதிநீர் இணைப்பு மட்டுமே நிரந்தர தீர்வு. எப்படி தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்தது போல் இந்தியா முழுவதும் நதிநீரை இணைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை பிரதமர் எடுக்க வேண்டும் என பிரேமலதா கூறினார். 

IPL_Entry_Point