தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn 12th Results 2023 : திண்டுக்கல்லில் கூலி தொழிலாளி மகள் 600க்கு 600 எடுத்து சாதனை !

TN 12th Results 2023 : திண்டுக்கல்லில் கூலி தொழிலாளி மகள் 600க்கு 600 எடுத்து சாதனை !

Divya Sekar HT Tamil
May 08, 2023 01:19 PM IST

தமிழ்,ஆங்கிலம்,எக்னாமிக்ஸ்,காமர்ஸ்,அக்கவுண்டன்சி,கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாணவி சாதனை படைத்துள்ளார்.

மாணவி நந்தினி
மாணவி நந்தினி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ்,ஆங்கிலம் கணினி பயன்பாடு, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மொத்த மதிப்பெண் 600 க்கு 600 மதிப்பெண் வாங்கியுள்ளார். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடமும் தமிழகத்தில் முதலிடமும் பெற்றுள்ளார்.

மேலும் இப்பள்ளி மாணவி நந்தினி இப்பள்ளியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்து வருகிறார்.மேலும் இப்பள்ளியின் பள்ளி தாளாளர் ஜெயபால். தலைமை ஆசிரியர் அகிலா, தமிழ் ஆசிரியர் அனுராதா,ஆங்கில ஆசிரியர் தீபா, மரிய சாந்திராஜலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்து தற்போது அதிக மதிப்பெண் பெறுவதற்கு அனைவரும் ஊக்குமளித்ததாகவும் தனது வெற்றிக்கு தனது பெற்றோரும் உறுதுணையாக இருந்ததாகவும் கூறினார்.

மேலும் நந்தினி தந்தை சரவணகுமார் தச்சு தொழிலாளியாக உள்ளார். அம்மா பாலபிரியா மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் பிரவீன் என்ற சகோதரரும் உள்ளார். 600க்கு 600 மதிப்பெண் பெற்று அபார சாதனை படைத்த மாணவி நந்தினி CAபடிக்க விருப்பம் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்