தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Palani Train: பழனி மலை ஏற பெருசா என்ன வந்திருக்கு தெரியுமா?

palani train: பழனி மலை ஏற பெருசா என்ன வந்திருக்கு தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Jan 23, 2023 01:07 PM IST

பழனி மலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக புதிய இழுவை ரயில் பெட்டி தானமாக வழங்கப்பட்டது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

மலைக்கோவிலுக்கு மேலே செல்ல வசதியாக ஏற்கனவே மூன்று மின் இழுவை ரயில்கள் உள்ளன. இவற்றில் 30பேர் வரை செல்லும் வகையில் உள்ளது. ஆனால் தற்போது சந்திரமோகள் வழங்கியுள்ள நவீனமான புதிய மின் நிலுவை ரயில் பெட்டியில் 72 பேர் வரை பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்திலேயே பழனி கோவிலில் மட்டுமே மின் இழுவை ரயில் சேவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த 1965ம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் முதல் மின்இழுவைரயில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது மின் இழுவை ரயில் கடந்த 1982ம் ஆண்டும் மூன்றாவது மின் இழுவை ரயில் கடந்த 1988ம் ஆண்டும் தொடங்கப்பட்டது. 

முருகனுக்கு உள்ள மற்றொரு மலைக்கோவிலான விராலிமலை சிறியது என்பதால் மலையில் கார் செல்ல வசதியாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் லிப்ட் வசதியும் அங்கு உள்ளது. இதேபோல் திருச்சி மலைக்கோட்டையிலும் வசதிகள் செய்துதர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சார்பில் புதிய நவீனமான மின் இழுவை ரயில்பெட்டி வழங்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள மின் இழுவை ரயில் பெட்டி  பக்தர்கள் சேவைக்கு வருவதற்கு சிறிது நாட்கள் ஆகும் என்றும் வெட்டியின் அமைப்பை பொறுத்து சில சில பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும், எனவே தைப்பூசம் நிறைவடைந்து பிறகே புதிய மின்இழுவைரயில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை பழனி மலைக்கோவிலில் உள்ள உபகோயில்களில் கலாகர்சனம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பழனி கோவில் அறங்காவலர்கள்,  இணைஆணையர், கோவில் அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்