தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore: கோவை டூ ஜார்கண்ட்! யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்? ஜார்கண்ட் ஆளுநர்!

Coimbatore: கோவை டூ ஜார்கண்ட்! யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்? ஜார்கண்ட் ஆளுநர்!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 12, 2023 12:35 PM IST

பாஜக கட்சி குறித்த அறிமுகமே தமிழகத்தில் இல்லாத காலத்தில் கட்சியை உருவாக்கி வளர்த்ததில் சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு பெரும் பங்கு உள்ளது.

பிரதமருடன் சி.பி.ராதாகிருஷ்ணன்
பிரதமருடன் சி.பி.ராதாகிருஷ்ணன்

ட்ரெண்டிங் செய்திகள்

சி.பி.ராதாகிருஷ்ணன்

திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணன் வயது (65) தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வஉசி கல்லூரியில் பயின்றவர். அப்போதிருந்தே இந்துத்துவாக கொள்களையால் ஈர்க்கப்பட்டார். பின் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணைந்து செயல்பட தொடங்கினார். 1973லிருந்து ஜனசங்கத்துடன் இணைந்து செயல்பட்டார். தமிழக பாஜகவை தோற்றுவிப்பதில் பொன்ராதா கிருஷ்ணன் சி.பி.ராதா கிருஷ்ணன் போன்ற தலைவர்கள் முன்னனிணில் இருந்தனர். ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் பாஜகவின் முகமாக வாஜ்பாய் காலத்தில் பார்க்கப்பட்டவர் சி.பி ராதாகிருஷ்ணன். பாஜக தொடங்கப்பட்ட நாட்களில் கட்சியை வளர்க்க கடுமையாக உழைத்தவர். அதற்காகக் கன்னியாகுமரி முதல் சென்னை வரை பாதயாத்திரை மேற்கொண்டார்.

தமிழக பாஜகவின் முதல் மக்களவை உறுப்பினர்

பாரதிய ஜனதா கட்சியின் ஆரம்ப நிர்வாகிகளில் முக்கியமானவராக கருதப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 1998 ம் ஆண்டில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அந்த வகையில் தமிழகத்தில் இருந்து பாஜகவிற்கு முதல் முறையாக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் வணிகக்குழு மற்றும் துணைக்குழு உறுப்பினராகவும் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்துக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். மேலும் நிதி அமைச்சக ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

இதையத்து 1999ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவையிலிருந்து மீண்டும் மக்களவைக்குத் தேர்வானார். அப்போது ஏற்கனவே பணியாற்றிய நாடாளுமன்ற குழுக்களில் மீண்டும் உறுப்பினராக இருந்தார். மத்திய சிறுகுறு தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கயிறு வாரியத்தின் தலைவராக செயல்பட்டார்.

தொடர் தோல்வி

இதையடுத்து கடந்த 2004,2014, 2019 ஆகிய 3 நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பாஜக வளர்ச்சி

கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் இன்று பாஜக பெரும்பாலானவர்களுக்கு பரிட்சியமான கட்சியாக உருவெடுத்துள்ளது . ஆனால் பாஜக கட்சி குறித்த அறிமுகமே தமிழகத்தில் இல்லாத காலத்தில் கட்சியை உருவாக்கி வளர்த்ததில் சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு பெரும் பங்கு உள்ளது.

மேலும் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் முக்கிய தலைவர்களுடனும் அரசியலுக்கு அப்பாற்பட்டு பழகக்கூடியவர்

கவர்னர் பதவி குறித்து…

தாயாருடன் சிபி ராதாகிருஷ்ணன்
தாயாருடன் சிபி ராதாகிருஷ்ணன்

இந்நிலையில் ஜார்கண்ட் மாநில ஆளுநராக, தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து அவர் கூறியதாவது, "தமிழர்கள் மீது தமிழ் மண்ணின் மீது மோடி வைத்துள்ள பாசத்திற்கும் மரியாதைக்கும் கிடைத்த கவுரவமாக இந்த ஆளுநர் பதவியை பார்ப்பதாக சி.பி.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமிழர்கள் மீதும், தமிழ் பண்பாடு மீதும், கலாச்சாரம் மீதும் வைத்துள்ள அன்பின் வெளிப்படையாக தான் 3 வது தமிழராக நான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளேன். அதேசமயம் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் கிடைத்த பெருமையாக ஆளுநர் பதவியை பார்க்கிறேன். கவர்னர் மத்திய அரசையும் மாநில அரசையும் இணைக்கும் பாலமாக இருப்பவர். மக்கள் நலனில் அக்கறை கொண்டு மாற்று கட்சி ஆட்சியில் இருந்தாலும் இணைக்கின்ற பாலமாகதான் இந்த பதவியை நான் கருதுகிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இந்நிலையில் ஜார்கண்ட் மாநில ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் @CPRBJP அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன்." இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்