தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  M.k.stalin: மீனவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதல்வர்!

M.K.Stalin: மீனவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன முதல்வர்!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 18, 2023 12:21 PM IST

கட்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

முதல்வர் மு.க ஸ்டாலின்  (கோப்புபடம்)
முதல்வர் மு.க ஸ்டாலின் (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றார். இந்நிலையில் இன்று காலை அவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதையடுத்து மண்டபத்தில் இன்று நடைபெற்று வரும் மீனவர் நல மாநாட்டில் முதல்வர் உரையாற்றினார். இந்த மாநாட்டில் 8 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்றனர்.

அப்போது மீன் பிடிப்பதில் இந்தியாவில் ஐந்தாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு என்றார். தமிழ்நாட்டில் வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது. மீனவர்களுக்காக திமுக அரசு ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளது என்று கூறினார்.

மேலும் மீனவர்களுக்கு மீன் பிடிகாலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார் மீனவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்படும் என்றார். மேலும் பாஜக ஆட்சியில் மீனவர்கள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

-கட்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

-தமிழ்நாடு மீன் வள பல்கலைக்கழகத்தில் மீனவர் குடும்ப மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5%-ல் இருந்து 20%-ஆக உயர்த்தியுள்ளோம்.

- கடல் அரிப்பை தடுக்க, படகுகளை பாதுகாக்க தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம்

-ஆண்டுக்கு விசைப்படகுக்கு டீசல் 18,000 லிட்டர், நாட்டுப்படகுகளுக்கு 4,000 லிட்டர் விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது

-குடிமைப்பணி தேர்வுக்காக மீனவ சமுதாய மாணவர்களுக்கு 6 மாத சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்