தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cm Stalin : எல்லாருக்கும் எதுவும் உண்டு என்று சொல்வது திராவிடம்.. ஆளுநரின் கருத்துக்கு முதல்வர் பதிலடி!

CM Stalin : எல்லாருக்கும் எதுவும் உண்டு என்று சொல்வது திராவிடம்.. ஆளுநரின் கருத்துக்கு முதல்வர் பதிலடி!

Divya Sekar HT Tamil
Oct 30, 2023 11:00 AM IST

இன்னாருக்கு இதுதான் என சொல்வது ஆரியம் எல்லாருக்கும் எதுவும் உண்டு என்று சொல்வது திராவிடம். இந்த வித்தியாசத்தை ஆளுநர் ரவி புரிந்துகொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் முதல் நிகழ்வாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவ சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மதுரை ஆவின் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது. 

மதுரை - தொண்டி சாலையில் அப்போலோ சந்திப்பில் ரூ.150.28 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமையவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடரந்து தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் உருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர்கள் பி.மூர்த்தி பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கை அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக நடத்தியவர் கருணாநிதி . பசும்பொன்னில் 2 மண்டபங்கள் அமைக்கப்பட உள்ளன. தேவர் பெயரில் பல்வேறு இடங்களில் கல்லூரிகள் அமைய காரணமாக இருந்தவர் கருணாநிதி . 

ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இன்னாருக்கு இதுதான் என சொல்வது ஆரியம் எல்லாருக்கும் எதுவும் உண்டு என்று சொல்வது திராவிடம். இந்த வித்தியாசத்தை ஆளுநர் ரவி புரிந்துகொள்ள வேண்டும்”என தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு புண்ணிய பூமி இங்கு ஆரியம், திராவிடம் என எதுவும் கிடையாது என திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ரவி பேசியிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்