தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai : மின் கம்பங்களில் கட்டியுள்ள கேபிள் வயர்களை அகற்ற மின் வாரியம் உத்தரவு

Chennai : மின் கம்பங்களில் கட்டியுள்ள கேபிள் வயர்களை அகற்ற மின் வாரியம் உத்தரவு

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 17, 2023 12:07 PM IST

மின் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த கேபிள் வயர்கள் அகற்றப்பட்டதா என்பதை மின்வாரிய அதிகாரிகள் பல ஆய்வின் மூலம் உறுதி செய்ய வேண்டும்

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் மின் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. இதைத்தடுக்க மின் வாரியம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் மின் கம்பங்களில் கேபிள் வயர்கள் விளம்பர பலகைகை கட்டி வைப்பதால் விபத்து ஏற்பட்டுகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்துள்ளது. இந்நிலயில் தற்போது அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். மின் கம்பங்களில் கேபிள் டிவி வயர்கள் விளம்பர பலகைகள் கட்டி வைப்பதன் மூலம் விபத்துக்கள் நேரிட வாய்ப்பு உள்ளது. விபத்து மற்றும் உயிரிழப்பு சம்பவங்களை தவிர்க்க கேபிள் வயர்களை 15 நாட்களுக்குள் அகற்றுமாறு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மின் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த கேபிள் வயர்கள் அகற்றப்பட்டதா என்பதை மின்வாரிய அதிகாரிகள் பல ஆய்வின் மூலம் உறுதி செய்ய வேண்டும். மின்சார வாரியத்தின் உத்தரவை பின்பற்றாமல் விபத்து ஏதும் நடைபெற்றால் அந்தப் பகுதியின் மின்வாரிய பொறியாளரே விபத்துக்கு பொறுப்பேற்க நேரிடும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்