தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  எல்ஐசியில் உதவி நிர்வாக அலுவலர் வேலை – விண்ணப்பிக்க என்ன தகுதி?

எல்ஐசியில் உதவி நிர்வாக அலுவலர் வேலை – விண்ணப்பிக்க என்ன தகுதி?

Priyadarshini R HT Tamil
Jan 23, 2023 02:35 PM IST

இளநிலை பட்டம் பெற்றவர்கள் எல்ஐசியில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய நபர் விண்ணபித்து பயன்பெற இங்கே தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாள். அன்று பதிவுசெய்து தேர்வு கட்டணத்தை செலுத்திவிட வேண்டும். அடுத்த மாதம் 17 மற்றும் 20ம் தேதிகளில் ஆன்லைனில் முதன்மை தேர்வுகள் நடைபெறும். மார்ச் மாதம் 18ம் தேதி முக்கிய தேர்வுகள் நடைபெறும்.

எனவே விண்ணபிப்பவர்கள் தொடர்ந்து எல்ஐசியின் அதிகாரப்பூர்வமான இணையதளமான www.licindia.in என்ற இணையதளத்தை பார்த்துக்கொண்டிருக்கவேண்டும் ஏனெனில் இந்த தேதிகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். பட்டியலினம், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சலுகைகள் உண்டு.

ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை படிப்பை அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி அல்லது நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும். சம்பளம் மாதத்திற்கு 92,870 ரூபாய் வழங்கப்படும். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று பணிபுயி வேண்டும். விண்ணப்பக்கட்டணம் பட்டியலினம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.85ம் மற்றவர்களுக்கு ரூ. 700ம் ஆகும். முதன்மை தேர்வுகள் சரியானவற்றை தேர்தெடுக்க வேண்டும் பாணியில் நடைபெறும். தேர்வுகள். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும். தேர்வுகளில் ரீசனிங், குவாண்டிடேடிவ், ஆங்கில இலக்கணம், கட்டுரை ஆகியவற்றிலிருந்து கேள்விகள் வரும். தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

முக்கிய தேர்வுகள் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். சரியானவற்றை தேர்ந்தெடு மற்றும் விரிவான விடை ஆகிய இரண்டு பாணிகளிலும் இருக்கும். சரியானவற்றை தேர்தெடு முடிந்தவுடன், விரிவானவற்றை எழுதுக தேர்வு நடைபெறும். விண்ணபத்தாரர்கள் கம்பியூட்டரில் விடைகளை தட்டச்சு செய்ய வேண்டும். அடுத்ததாக நேர்முகத்தேர்வுகள் நடைபெறும். பட்டியல் இனத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு பயிற்சியும் எல்ஐசியே இலவசமாக வழங்கும். அதற்று எல்சியின் இணையதளத்தில் “கரியர்ஸ்“ என்ற பக்கத்தில் சென்று விவரங்களை தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரர்கள் தங்களின் புகைப்படம், கையெழுத்து, கட்டைவிரல் ரேகை மற்றும் தாங்கள் எழுதிய கடிதம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க செலுத்திய பணம் திரும்பி செலுத்தப்படாது. எல்ஜசியின் www.licindia.in என்ற இணையதளத்தில் சென்று Recruitment of AAO (Generalist) 2023 என்பளை கிளிக் செய்தால் பதிவு செய்யும் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். விண்ணப்பத்தில் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்துவிட்டு, பணத்தையும் செலுத்தி, தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பித்துவிட்டு, தேர்வுக்கு வரும்போது இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் வரவேண்டும்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்