தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  முதல்வர் ஸ்டாலின் மீது 200 கோடி லஞ்ச புகார்? Cbiயில் புகாரளிக்க அண்ணாமலை முடிவு

முதல்வர் ஸ்டாலின் மீது 200 கோடி லஞ்ச புகார்? CBIயில் புகாரளிக்க அண்ணாமலை முடிவு

Kathiravan V HT Tamil
Apr 14, 2023 11:21 AM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபரிசன் ஆகியோர் மீது குற்றம்சாட்டி உள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில், 2008 ஆம் ஆண்டில் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தொடங்கிய போது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தவித தொழிலையும் அவர் செய்யவில்லை 2008-2011 வரை 300 கோடிக்கு படம் எடுத்துள்ளார்கள், அந்த பணம் எங்கிருந்து வந்தது. ரெட் ஜெயண்ட் முதலீட்டாளர்கள் யார்? ரெட் ஜெயண்ட் மூவீஸ் இன்றைய மதிப்பீடு 2010 கோடி ரூபாயாக கொடுத்துள்ளோம். அது இல்லை என்றால் அவர் மறுக்கலாம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் செய்வது ’மணி லாண்டரிங்’ வெஸ்ட் பேக் என்ற ஆப்ரிக்காவில் மணி லாண்டரிங் செய்யும் நிறுவனம் 2008ஆம் ஆண்டில் ’செண்ட் ஜார்ஜ்ஜஸ் பேங்க்’ என்ற நிறுவனத்திடம் இணைந்து லண்டனில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் இயக்குநர் சீனிவாஸ் வெங்கடேஷ், அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

லண்டனில் இயங்கி வரும் செண்ட் ஜார்ஜ்ஜஸ் பேங்க் கட்டடத்தில் ஸ்பேஸ் டெல் யுகே லிமிட்டெட், வாயிஸ் டெக்ஸ்ட் சிஸ்டெம் லிமிட்டெட் என்ற இரண்டு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. சீனிவாசன் வெங்கடேஷ் நடத்தும் இரண்டு நிறுவனங்களின் பங்குதாரர் சபரீசன் வேதமூர்த்தி.

முதலமைச்சரின் சொந்த மருமகன் இங்கிலாந்தில் உள்ள மணிலாண்டரிங் பேங்கில் உள்ள பில்டிங்கில் இரண்டு நிறுவனங்களை நடத்துகிறார். இதற்கு முதலமைச்சரும், சபரீசனும் விளக்கம் அளிக்க வேண்டும்.

முதலமைச்சர் துபாய் சென்றபோது மணி லாண்டரிங் செய்கிறார்கள் என்று சொன்னோம். அவர் அங்கு சென்று நோபல் ஸ்டீல்ஸ் என்ற கம்பெனி உடன் கையெழுத்துப்போட்டார். அந்த கம்பெனி தமிழ்நாட்டில் ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்யப்போவதாக திமுக சாதனையாக சொன்னார்கள்.

நோபல் ஸ்டீல்ஸ் கம்பெனியின் சேர்மேன் பஷீர் முகமது, இந்த கம்பெனி இயக்குனராக உதயநிதி ஸ்டாலின் 2009ஆம் ஆண்டு இருந்துள்ளார். பின்னர் 2016ஆம் ஆண்டு இயக்குநராக இருந்த அன்பில் மகேஷும் ராஜினாமா செய்துள்ளார்கள்.

இந்த தகவல்கள் எல்லாம் தேர்தல் படிவத்தில் வரக்கூடாது என்பதற்காக முன்னதாகவே ராஜினாமே செய்கிறார்கள்

நேரடியாக ஊழல் புகார் ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது சுமத்துகிறோம். இதில் அவர்தான் முதல் குற்றவாளி.

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் சென்னையில் முதல் கட்ட மெட்ரோ கட்ட அனுமதி வருகிறது. இதற்காக சிறப்பு திட்டமாக அறிவித்து ஜிகா என்ற ஜப்பான் நிறுவனம், மத்திய அரசு, துணை நிறுவனம், மற்றும் மாநில அரசுகள் இணைந்து 14 ஆயிரத்து 600 கோடி செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.

தேர்தலுக்கு 6 மாதம் இருந்த போது அவசர அவசரமாக டெண்டரை கொண்டு வருகிறார்கள். இதில் இந்திய நிறுவனம் விமல், அல்ஸ்டாம், ஸ்பெயின் நிறுவனமான சி.ஏ.எஃப்.எம்.சி ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

டெண்டர் இருப்பதற்கு சிலநாட்களுக்கு முன் சி.ஏ.எஃப்.எம்.சி தேர்வாகிறது. கஷ்டம் டியூட்டி சேர்ந்த உடனே ஆல்ஸ்ட் ஸ்டாம் ஒப்பந்ததை பெறுகிறது.

ஆல்ஸ்ட் ஸ்டாம் நிறுவனம் உலகம் முழுவதும் லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு அமெரிக்காவில் 722 மில்லியன் அபராதம் விதித்துள்ளார்கள்.

முதலமைச்சர் அவர்களுக்கு 200 கோடி ரூபாய் ஆல்ட்ஸ்டாம் நிறுவனத்தால் 2011 தேர்தல் நிதியாக லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதை கொடுத்த நிறுவனம் இந்தோ-யூரோப்பியன் வெண்ட்சர்ஸ் என்ற சிங்கப்பூர் நிறுவனம் மற்றும் ஹாங்காகை சேன்ற குளோபல் கிங்க்ஸ் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனமும் கொடுத்துள்ளது. இதனை விசாரிக்க சிபிஐக்கு நானே விசாரிக்க புகார் அளிக்க உள்ளேன்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்