தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mk Stalin:மார்ச் பட்ஜெட்டில் 1000 ரூபாய் உரிமை தொகை அறிவிப்பு! ஸ்டாலின் அதிரடி

MK Stalin:மார்ச் பட்ஜெட்டில் 1000 ரூபாய் உரிமை தொகை அறிவிப்பு! ஸ்டாலின் அதிரடி

Kathiravan V HT Tamil
Feb 25, 2023 12:23 PM IST

“பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைத்தொகையை நீங்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன்”

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வீதிவீதியாக வாக்கு சேகரித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றி விட்டோம் என்று தவறான தகவல்களை உங்களுக்கு அளிக்க விரும்பவில்லை, எதிர்க்கட்சித் தலைவர், திமுக எதையும் செய்யவில்லை என குற்றம்சாட்டி வருகிறார்.

தேர்தல் அறிவிக்கையில் கூறிய 85 சதவீத பணிகளை நிறைவேற்றி உள்ளோம், 5 ஆண்டுகளை செய்யக்கூடிய பணிகளைத்தான் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம், இதனை நிறைவேற்ற 5 ஆண்டுகள் அல்ல, இன்னும் ஒராண்டில் நிறைவேற்றுவோம்.

பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைத்தொகையை நீங்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். உறுதியாக சொல்கிறேன் மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பு மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்படும், நிதிநிலையை அதிமுக ஒழுங்காக வைத்துவிட்டு சென்றிருந்தால், ஆட்சிக்கு வந்ததுமே மகளிருக்கு உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றி இருப்போம்.

சொன்னதை மட்டுமின்றி சொல்லாததையும் சொல்லும் ஆட்சியாக திமுக உள்ளது. இது இடைத்தேர்தல் மட்டுமல்ல; இது ஒரு எடைத்தேர்தல், இந்த ஆட்சி ஒழுங்காக நடந்து வருகிறதா என்பதை எடைபோட்டு மக்கள் வழங்க வேண்டிய தீர்ப்பு

ஏற்கெனவே திருமகன் ஈவெரா 9ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். உதயநிதி பரப்புரையில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று சொல்லி உள்ளார். ஆனால் நான் கேட்கிறேன், அதிமுக வேட்பாளர் டெப்பாசிட் இழக்கும் வகையிலான வெற்றியை தேடித் தர வேண்டும் அதைத்தான் உங்களிடத்திலே கேட்கிறேன்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்