தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai: அண்ணாமலை நடைபயணம்: புறக்கணிக்கிறதா அதிமுக, பாமக?

Annamalai: அண்ணாமலை நடைபயணம்: புறக்கணிக்கிறதா அதிமுக, பாமக?

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 27, 2023 12:02 PM IST

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணிக்கட்சிகள் உள்துறை அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது

அண்ணாமலை (கோப்புப்படம்)
அண்ணாமலை (கோப்புப்படம்) (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

பாஜக தலைவர் அண்ணாமலை இராமேஸ்வரத்தில் வரும் 28ம் தேதி "என் மண் என் மக்கள்" என்ற பாத யாத்திரையை தொடங்க உள்ளார். இந்த பாத யாத்திரைக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் பலருக்கும் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, ஜிகே.வாசன், பாமக தலைவர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டணியில் தற்போது வரை இடம் பெறாமல் இருந்த தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்திற்கும் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக பிரேமலதா விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து பாஜக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். NDA கூட்டணி தொடர்பாக தில்லியில் நடந்த அந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் இந்த அழைப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதற்காக இரண்டு நாள் சுற்று பயணமாக தமிழகம் வரும் அமித்ஷா ஜூலை 29ம் தேதி ராமேஸ்வரம், விவேகானந்தர் நினைவில்லம், அப்துல் கலாம் அருங்காட்சியம் ஆகிய இடங்களுக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அண்ணாமலையின் நடைபயண தொடக்க நிகழ்ச்சியில் பாமக பங்கேற்காது என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே போல் இந்த நடைபயண தொடக்க விழாவில் முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமாக எடப்பாடி பழனிச்சாமியும் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணிக்கட்சிகள் உள்துறை அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்