தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’மக்களை தேடி ஆன்லைன் அரசு சேவை’ பேரவையில் பிடிஆர் தகவல்!

’மக்களை தேடி ஆன்லைன் அரசு சேவை’ பேரவையில் பிடிஆர் தகவல்!

Kathiravan V HT Tamil
Apr 17, 2023 11:50 AM IST

இந்தியாவிலேயே அதிக ஸ்மார்ட் போன் பயன்பாடு உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது - நிதியமைச்சர் பிடிஆர்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்

ட்ரெண்டிங் செய்திகள்

இன்றைய தினம் (17-04-2023) மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகநலத்துறை மானியக்கோரிக்கை நடைபெற உள்ள நிலையில் கேள்வி நேரத்தின் போது, தளி தொகுதியில் புதியதாக பிரிக்கப்பட்ட அஞ்செட்டி தாலுக்காவில் சார்நிலை கருவூலம் அமைக்க ஆவண செய்யப்படுமா என்று எம்.எல்.ஏ ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகாராஜன், ஏற்கெனவே கடனிலும், நிதி பற்றாக்குறையிலும் வருவாய் கணக்கில் பற்றாக்குறையிலும் பல ஆண்டுகளாக அரசு இயங்கி கொண்டிருக்கிறது. இந்த சூழலில் முதல் முக்கியத்துவம் கையில் இருக்கும் நிதியை வைத்து குளங்கள் ஏரிகளை தூர்வாருவது, குடிநீர் திட்டங்கள், சாலைகள், பாலங்களை கட்டுவது, மக்களிடம் கொண்டுபோய் செல்ல வேண்டிய நிதி ஆகியவைதான்.

அரசாங்கத்திடம் இருந்து பெற வேண்டிய சேவையோ அல்லது அரசுக்கு செலுத்த வேண்டிய நிதியையோ மிக சுலபமாக ஆன்லைன் மூலம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஸ்மார்ட் போன் பயன்பாடு உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

நான் ஒத்துக்கொள்கிறேன், அனைத்து மக்களும் ஆன்லைனை பயன்படுத்த முடியாது. அதற்காக தான் யாருக்கெல்லாம் பயன்படுத்த முடியவில்லையோ மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போல வீட்டிற்கு சென்று ஆன்லைன் சேவை வழங்க திட்டமிட்டுள்ளோம். எங்கெல்லாம் தேவையோ அங்கு சென்று செய்து கொண்டுக்கிறேன்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்