தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dindigul Accident : 45 பயணிகளுடன் அரசு பேருந்து.. சரக்கு வாகனத்தில் மோதி விபத்து.. ஒருவர் பலி.. மற்றவர்கள் நிலை என்ன?

Dindigul Accident : 45 பயணிகளுடன் அரசு பேருந்து.. சரக்கு வாகனத்தில் மோதி விபத்து.. ஒருவர் பலி.. மற்றவர்கள் நிலை என்ன?

Divya Sekar HT Tamil
Apr 29, 2023 10:37 AM IST

திண்டுக்கல் அருகே சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பேருந்து சரக்கு வாகனத்தில் மோதி விபத்து.
அரசு பேருந்து சரக்கு வாகனத்தில் மோதி விபத்து.

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது கோவையிலிருந்து தேனி நோக்கி அதிகாலை அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தை சௌந்தர்ராஜ பெருமாள் ஓட்டி வந்தார். கண்டக்டர் வேல்முருகன் உட்பட 45 பயணிகள் வந்து கொண்டிருந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி, தெத்துப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது சாலையில் ஓரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் பேருந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைபார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் கன்னிவாடி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் கோவையை சேர்ந்த பெயிண்டர் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும் கோவையில் இருந்து கேரளா சென்ற மகாலட்சுமி (23), ஸ்வேதா (24), ரேவதி (23), மகேஸ்வரி (23), உத்தமபாளையம் கார்த்திகேயன் (20), கோவை கணவாய் சேர்ந்த முருகேஸ்வரி (32), விசாலினி (14) கயல்விழி (12) , மற்றும் டிரைவர் சௌந்தர்ராஜ பெருமாள் (38), கண்டக்டர் வேல்முருகன் (35) உள்ளிட்ட 16க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

இவர்களில் 9 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பழுதாகிய லாரியை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. சிறிதுநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீண்டும் சீரானது. இந்த விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்