தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ias Officer Transfer: தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

IAS Officer Transfer: தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Karthikeyan S HT Tamil
Nov 16, 2023 09:52 PM IST

தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராக விஜய கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இணை செயலாளராக ரத்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்ட அரசாணை இதோ..

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்