தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  'Nothing Is Impossible'- கிரிக்கெட்டில் அதிவேகமாக 25ஆயிரம் ரன்களை கடந்த கோலி!

'Nothing Is Impossible'- கிரிக்கெட்டில் அதிவேகமாக 25ஆயிரம் ரன்களை கடந்த கோலி!

Manigandan K T HT Tamil
Feb 19, 2023 01:23 PM IST

Ind vs Aus 2nd Test: அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் அதிவேகமாக 25,000 ரன்களை கடந்த வீரரானார் விராட் கோலி.

விராட் கோலி
விராட் கோலி (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் என்று பார்க்கும்போது இந்திய அணியின் கோலி, 549 இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 577 இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 25,000 ரன்களை 588 இன்னிங்ஸ்களில் கடந்தார். அந்த வரிசையில் குறைந்த இன்னிங்ஸ்களில் விளையாடி அதிவேகமாக இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் சர்வதேச வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார்.

ஒட்டுமொத்தமாக அதிக ஸ்கோர்களை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டையும் சேர்த்தால் அதில் சச்சின் டெண்டுல்கர்தான் முதலிடத்தில் உள்ளார்.

சச்சின் 164 அரை சதங்கள், 100 சதங்கள் மொத்தம் 34,357 ரன்களை விளாசியிருக்கிறார். இலங்கை வீரர் குமார் சங்ககாரா 153 அரை சதங்கள், 63 சதங்களுடன் 28,016 ரன்களை குவித்துள்ளார்.

இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் ஆஸி., முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் 146 அரை சதங்கள், 71 சதங்களுடன் மொத்தம் 27483 ரன்களை குவித்துள்ளார்.

இலங்கை வீரர் மகிலா ஜெயவர்த்தனே மொத்தம் 25,957 ரன்களையும், தென் ஆப்பிரிக்காவின் காலிஸ் 25,534 ரன்களையும் பதிவு செய்துள்ளனர்.

25,000 ரன்களை கடந்த வீரர்கள் லிஸ்டில் விராட் கோலியும் தற்போது இடம்பிடித்துள்ளார். விராட் கோலி மொத்தம் 129 அரை சதங்களையும் 74 சதங்களையும் பதிவு செய்திருக்கிறார்.

இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 24,208 ரன்களுடன் இந்த லிஸ்ட்டில் 7வது இடத்தில் இருக்கிறார்.

WhatsApp channel

டாபிக்ஸ்