தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Aus 2nd Test: ‘ரவீந்திரன், ரவிச்சந்திரன் சுழலில் சின்னாபின்னமான ஆஸி.,’

Ind vs Aus 2nd Test: ‘ரவீந்திரன், ரவிச்சந்திரன் சுழலில் சின்னாபின்னமான ஆஸி.,’

Manigandan K T HT Tamil
Feb 19, 2023 11:11 AM IST

Ravindra jadeja: இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஜடேஜா-கேப்டன் ரோகித் சர்மா
ஜடேஜா-கேப்டன் ரோகித் சர்மா (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா இந்தியா வந்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நாக்பூரில் நடந்தது. அதில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.

இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 78.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது.

ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கவாஜா அதிகபட்சமாக 81 ரன்கள் விளாசினார். இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா, 83.3 ஓவர்களில் 262 ரன்களில் ஆட்டமிழந்தது.

அக்ஸர் படேல் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸி., பவுலர் லயன் 5 விக்கெட்டுகளை சுருட்டினார்.

1 ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2 வது இன்னிங்ஸை நேற்று தொடங்கியது. நேற்றே உஸ்மான் கவாஜாவை ஜடேஜா வீழ்த்தினார்.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் அஸ்வின்-கோலி
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் அஸ்வின்-கோலி (PTI)

டிராவிஸ் ஹெட், மார்னஸ் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்றுவரும் 3வது நாள் ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா அணி விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது.

ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி ஆஸி., வீரர்களின் விக்கெட்டுகளை அள்ளினர்.

அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இன்றைய ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் உள்பட 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ரவீந்திர ஜடேஜா.

அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 31.1 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்துள்ளது. 115 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி பெறும்.

WhatsApp channel

டாபிக்ஸ்