தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Csk Vs Rr: ராஜஸ்தானுக்கு எதிரான த்ரில்லர்! புதிய சாதனை படைத்த தோனியின் ஆட்டம்

Csk vs RR: ராஜஸ்தானுக்கு எதிரான த்ரில்லர்! புதிய சாதனை படைத்த தோனியின் ஆட்டம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 13, 2023 02:36 PM IST

தோனியின் 200வது போட்டி என்ற சிறப்பு மட்டுமில்லாமல், கடைசி நேரத்தில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. உச்சகட்ட த்ரில்லராக அமைந்த இந்த போட்டியை ஜியோ சினிமாவில் அதிக பார்வையாளர்களாக பார்க்கப்பட்டு புதிய சாதனை புரிந்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பேட் செய்ய களமிறங்கிய தோனி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பேட் செய்ய களமிறங்கிய தோனி (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத்தொடர்ந்து இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 175 ரன்கள் எடுத்த நிலையில், அதை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 172 ரன்கள் எடுத்து 3 ரன்களில் தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் கடைசி 2 ஓவர்களில் 40 ரன்கள் தேவை என்று இருந்தபோது களத்தில் தோனி - ஜடேஜா ஆகியோர் பேட் செய்தனர். இதில் ஆட்டத்தின் 19வது ஓவரில் 19 ரன்கள் அடிக்கப்பட்ட நிலையில், 20வது ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது பேட் செய்தார் தோனி. இந்த ஓவரை மட்டும் ஜியோ சினிமா ஸ்டீரிமிங்கில் 2.2 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இது ஒரு சாதனையாகவே அமைந்துள்ளது.

இந்த ஓவரில் 5 பந்துகளை எதிர்கொண்ட தோனி 2 சிக்ஸர்கள், 2 சிங்கிள் உள்பட 14 ரன்களை எடுத்தார். முதல் மூன்று பந்தில் 2 சிக்ஸர்களை பறக்க விட்டு ஆட்டத்தின் வெற்றி வாய்ப்பை சிஎஸ்கே பக்கம் மாற்றினார்.

ஆனால் கடைசி மூன்று பந்தை ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா அற்புதமாக பந்து வீசிய நிலையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது சிஎஸ்கே.

உச்சக்கட்ட த்ரில்லராக அமைந்த இந்த போட்டியில் தோனி - ஜடேஜா ஆடிய கடைசி ஓவரை, ஜியோ சினிமாவில் அதிகபட்சமாக 2.2 கோடி பார்வையாளர்களை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஆர்சிபி - லக்னெள் அணிகள் மோதிய போட்டியில், டூ ப்ளெசிஸ் - மேக்வெல் பேட்டிங் 1.8 கோடி பார்வைகளை பெற்று இரண்டாவது இடத்திலும், அதேபோட்டியில் லக்னெள வெற்றி பெற்ற தருணம் 1.7 கோடி பார்வைகளை பெற்று மூன்றாவது இடத்திலும், சிஎஸ்கே - லக்னெள போட்டியில் தோனி களமிறங்கிய தருணம் 1.7 கோடி பார்வைகளை பெற்று நான்காவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் - சிஎஸ்கே போட்டியில் தோனி பேட் செய்த தருணம் 1.6 கோடி பார்வைகளை பெற்று ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்