தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  எம்ஜிஆர் கொடுத்த முத்தம்.. வேண்டாம் என சொன்ன வாலி.. கலைஞர் தான் காரணம்.. என்ன நடந்தது?

எம்ஜிஆர் கொடுத்த முத்தம்.. வேண்டாம் என சொன்ன வாலி.. கலைஞர் தான் காரணம்.. என்ன நடந்தது?

Nov 13, 2023 10:30 AM IST Divya Sekar
Nov 13, 2023 10:30 AM , IST

எங்கள் தங்கம் படத்தில் இடம்பெற்ற நான் அளவோடு ரசிப்பவன் பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் எங்கள் தங்கம். இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என பலரும் நடித்தனர்.எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி. அனைத்து பாடல்களுமே ஹிட் பாடல்கள் தான். 

(1 / 5)

இப்படத்தில் இடம்பெற்ற நான் அளவோடு ரசிப்பவன் பாடல் உருவான கதை குறித்து வாலி ஒரு நேர்காணலில் சொல்லி இருப்பார். 

(2 / 5)

வாலி கூறுகையில், “எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் ஒரு அற்புதமான நட்பு இருக்கும். கலைஞரின் சொந்த படம் எங்கள் தங்கம். இந்த படத்தில் நான் எம்ஜிஆருக்கு பாடல் எழுதினேன். இதில் காதல் டூயட் பாடல் எம்ஜிஆருக்கு எழுத வேண்டும். நான் சரணம் எல்லாம் எழுதி முடித்துவிட்டேன். ஆனால் பல்லவியில் நான் அளவோடு ரசிப்பவன் என்ற வரிகள் எழுதிவிட்டு அடுத்து வரிகளை யோசித்து கொண்டு இருந்தேன்.

(3 / 5)

அப்போது கலைஞர் வந்தார். என்னிடம் என்னைய்யா இப்படி உட்காந்துட்டு இருக்க என கேட்டார். அப்போது நான் அளவோடு ரசிப்பவன் என வரிகள் எழுதி விட்டேன் அடுத்த வரிகள் யோசித்து கொண்டு இருக்கிறேன் என சொன்னேன். அதற்கு அவர் எம்ஜிஆர் இமெஜ் இந்த பாடலில் வரவேண்டும் என சொல்லி நான் அளவோடு ரசிப்பவன் எதையும் அளவின்றிக் கொடுப்பவன் என பல்லவி வரிகளை சொன்னார். 

(4 / 5)

பின்னர் இந்த பாடலை எம்ஜிஆரிடம் கொண்டு போய் காட்டிய உடன் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. பின்னர் என்னை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார். நான் எதற்கு எனக்கு முத்தம் கொடுத்தீர்கள் என கேட்டேன் அதற்கு அவர் பாடல் மிகவும் அருமையாக உள்ளது என்றார். நான் எனக்கு முத்தம் கொடுக்காதீர்கள் கலைஞருக்கு கொடுங்கள் அவர் தான் இதை எழுதினார் என சொன்னேன்” என்றார். இப்பாடல் இப்படி தான் உருவானது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்